























வாய்மொழி அற்ற கற்றலில் ஒழுங்கின்மை

Dinusha Manjarie Wickremesekera
கற்றல் என்பது நாம் பிறந்த நாளிலிருந்து தொடங்கும் ஒரு தொடர்ச்சியான செயன்முறையாகும். நமது உடல் வளர்ச்சி, சமூக மற்றும் உணர்ச்சி வளர்ச்சி, மொழி கையகப்படுத்தல் மற்றும் தொடர்பு, மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி ஆகியவற்றின் போது நாம் கற்றுக்கொள்கிறோம். ஒரு பிள்ளையின்; வளர்ச்சி கல்வியறிவு, கணித திறன்கள், உலகத்தைப் புரிந்துகொள்வது மற்றும் வெளிப்படையான கலைகள் மற்றும் வடிவமைப்பு போன்ற குறிப்பிட்ட கற்றல் பகுதிகளில் இருந்து பரிசோதிக்கப்படுகின்றது:
ஒரு நபருக்கு மூளையின் அமைப்பு அல்லது செயல்பாட்டில் மாற்றங்கள் இருக்கலாம், இது தகவல் செயலாக்கப்படும் விதத்தில் வேறுபாடுகளை ஏற்படுத்தும், இது மேலே உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்றல் பகுதிகளில் திறன்களைப் பெறுவதில் மற்றும் ஃ அல்லது மேம்படுத்துவதில் சிரமங்களை ஏற்படுத்துகிறது. இத்தகைய நிகழ்வுகளை நாம் கற்றல் ஒழுங்கின்மை என வகைப்படுத்துகிறோம்.
பல்வேறு வகையான கற்றல் ஒழுங்கின்மைகள் உள்ளன, மேலும் ஒரு பிள்ளைக்கு அல்லது வயது வந்தவருக்கு கற்றலில் ஒழுங்கின்மை இருந்தால், புத்திசாலித்தனத்தின் அளவு குறைவாக இருப்பதாகவோ அல்லது ஊக்கம்;; குறைவாக இருப்பதாகவோ அர்த்தம் இல்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம். இதன் பொருள் என்னவென்றால், செயலாக்கத்தில் உள்ள வேறுபாடுகள் காரணமாக, தனிநபருக்கு நாம் எடுத்துக் கொள்ளும் விடயங்களில் இடமிருந்து வலமாகத் தெரிந்துகொள்வது, மோசமான உடல் ஒருங்கிணைப்பு காரணமாக சாதுரியமின்மை, படிக்கும் போது எழுத்துககள் தலைகீழாக மாறுதல், வடிவங்களை அங்கீகரிப்பதில் , சமூக தொடர்பாடலின் போது மறைநதிருக்கும் கருத்துக்களின் அடிப்படையினை புரிந்துக்கொள்வதில் சிரமம் என்பன பொதுவானது, மற்றும் ஒழுங்கமைப்பாக இருத்தல்; ஒரு பணியை நிறைவு செய்தல் மற்றும் நேர மேலாண்மை என்பவற்றிற்கும் சிரமப்படல் என்பதே பொருள்படும்.
கற்றல் ஒழுங்கின்மைகள் ஒருவரது வாழ்நாள் முழுவதும் தொடரும், சில சமயங்களில் வயதுக்கு ஏற்ப தீவிரம் குறையும், ஆனால் கூடுதல் உதவி மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய புரிதலின் அடிப்படையில் சிறப்பு வழிமுறைகளை உள்ளடக்கிய ஆரம்ப தலையீடு - மிகவும் சாதகமான மாற்றங்களை தரும்.
வாய் மொழியற்ற கற்றல் ஒழுங்கின்மைகள் தொடர்பு மற்றும் தொடர்பு கொள்ளும் திறன் ஆகியவற்றுடன் தொடர்புடையது. நாம் ஒருவருடன் உரையாடும்போது, இரண்டு வகையான தகவல்தொடர்புகளைப் பயன்படுத்துகிறோம்: வாய்மொழி மற்றும் சொற்கள் அற்ற தொடர்பு. அண்ணளவாக 60மூ தகவல்தொடர்புகள் குரலின் தொனி மற்றும் சுருதி, உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்ற சொற்கள் அல்லாத குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு தனிநபருக்கு வாய்மொழி அல்லாத கற்றல் ஒழங்கின்மை இருந்தால், இந்த சொற்கள் அல்லாத நினைவூட்டற் குறிப்புகள் தவறவிடப்படுகின்றன, இதன் விளைவாக பெரும்பாலான அர்த்தங்கள் இழக்கப்படுகின்றன, மேலும் கூறப்பட்டவற்றுடன் தொடர்புடையதாக பதிலளிப்பதும் கடினமாகிறது. இது பதற்றத்தை விளைவிக்கிறது மற்றும் இந்த பதற்றம் ஒரு வலிமைமிக்க - வலுவான வாய்மொழி தொடர்பு உடனான புரிதலின் பற்றாக்குறையை மறைப்பதன் மூலம் தீர்க்கப்படுகிறது. வாய்மொழி அற்ற கற்றல் ஒழுங்கின்மைகள் உள்ள தனி நபர்கள் மொழித் திறனை விரைவாகப் பெறுவார்கள், மேலும் அதை நன்றாகப் பயன்படுத்துவார்கள், சில சமயங்களில் உரையாடல்களில் ஆதிக்கம் செலுத்துவார்கள். வாய்மொழி அற்ற கற்றல் ஒழுங்கின்மைகள் உள்ள ஒருவர் உரையாடலில் ஆதிக்கம் செலுத்துவதோடு, அர்த்தத்தை செயலாக்குவதில் ஏற்படும் சிக்கல்களை மறைக்க மற்றொரு வாக்கியத்தை நடுவில் சேர்த்துக் கொள்வர்;.
வாய்மொழி அற்ற கற்றலில் ஒழுங்கின்மை ஆண் மற்றும் பெண் இருவரையும் பாதிக்கும் என்று அறியப்படுகிறது, மேலும் இது குடும்பங்களில் செயற்படுகின்றது என்பதற்கு சில சான்றுகள் உள்ளன. சொற்கள் சம்மந்தமற்ற கற்றல் ஒழுங்கின்மைகள் மூளையின் வலது அரைக்கோளத்தை பாதிக்கிறது மற்றும் உடல் ஒருங்கிணைப்பு, சமூக தொடர்பு, சிக்கலைத் தீர்ப்பது, எண்ணங்களை ஒழுங்கமைத்தல் மற்றும் திட்டமிடல் போன்றனவும்
பாதிக்கப்பட்ட முக்கிய பகுதிகளில் அடங்கும் -
அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும்.
மிகவும் பொதுவான அறிகுறிகளில் சில:
- வாய்மொழி அல்லாத நினைவூட்டற் குறிப்புகளை அங்கீகரிப்பதில் சிக்கல்
- ஆரம்ப பேச்சு மற்றும் மொழி கையகப்படுத்தல்
- குறைந்தளவிலான ஒருங்கிணைப்பு, அதனால் சாதுரியமின்மை
- குறைந்தளவிலான மோட்டார் திறன்கள்
- எப்போதும் கேள்விகளைக் கேட்கும் தன்மை - சில சமயங்களில் திரும்பத் திரும்பக் கூட கேட்பது
- காட்சி-இடஞ்சார்ந்த சிரமங்கள் - அதனால் விடயங்களுக்கிடையில் மோதல் ஏற்படல்
- விடயங்களை உண்மையில் எடுத்துக்கொள்ளும் தன்மை
- மாற்றத்தை சமாளிப்பது சிரமம்
- பல-படி வழிமுறைகளைப் பின்பற்றுவதில் சிக்கல்
- பெரிய படத்தை பார்க்க முடியாமை
இந்த அறிகுறிகளில் ஒன்று அல்லது இரண்டு இருந்தால், உங்களுக்கு வாய்மொழி அல்லாத கற்றல் ஒழுங்கின்மை உள்ளது என்று அர்த்தம் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும் - இது ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் நோயறிகை கண்காணிப்புடன் ஒரு தகுதி வாய்ந்த மனநல நிபுணரால் சரியாக கண்டறியப்பட வேண்டும்.
வாய்மொழி அல்லாத கற்றல் ஒழுங்கின்மை குறிப்பாக அதிகப்படியான சமூகக் கவலைகள் மற்றும் அதிகப்படியான படித்தறியும் திறனின் தேவை காரணமாக பாடசாலைகளில்; ஏற்படும் அதிக பிரச்சனைகள் என்பவற்றால் பருவ வயதில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.
அதிகம்hக பேசும் மற்றும் குறுக்கிடும் வயதினை விட முதிர்ந்த குழந்தைகளை புரிந்துக்கொள்ளல் அவசியம் - அவருக்கு வாய்மொழி அல்லாத கற்றல் ஒழுங்கின்மை இருந்தால், அவர் தனக்குத் தெரிந்த விதத்தில் தொடர்புகொள்வது முரட்டுத்தனமாக இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த குழந்தைக்கு மென்மையான அன்புடன் மற்றும் குறிப்பிட்ட உத்திகள் மூலம் பலத்தை அதிகரிக்க உதவுவது மற்றும் சவால்களின் மூலம் பணிகளை மேற்கொள்வது நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும்.
உதவிக்குறிப்பு:
“யாராவது அதைப் பெறவில்லையா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நீங்கள் கூறியதில் அர்த்தம் தெளிவாக உள்ளது, ஆனால் அவருக்கு அது புரியவில்லை! உங்களை எரிச்சலூட்டும் நோக்கமான இருக்குமோ அல்லது இது ஒரு சொற்களற்ற கற்றல் ஒழுங்கின்மையாக இருக்குமா? படித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.”
அல்லது
வாய்மொழி அல்லாத குறிப்புகளை நாம் நம்பியிருப்பது, வாய்மொழி அல்லாத குறிப்புகளைச் செயல்படுத்த முடியாத சிலருக்கு பாதகத்தை ஏற்படுத்தலாம். முன்கூட்டிய தடை இதற்கு உதவுகிறது. சொற்கள் அல்லாத கற்றல் ஒழுங்கின்மை என்றால் என்ன, அவற்றை எவ்வாறு கையாளலாம். படித்து மேலும் அறிந்துக்கொள்ளுங்கள்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles


Dinusha Manjarie Wickremesekera
வேலைகள் மற்றும் ப ொறுப்புகள்: வீட்டில் உதவுதல்
பெரியவர்களாகிய நாம் சுதந்திரமாக நம்மமக் கவனித்துக் பகாள்ளவும், ஒரு வீட்மை நைத்தவும், ஒரு குடும்ெத்மத நைத்தவும், ஒரு வவமைமய வமற்பகாள்ளவும் , உறவுகமளப் வெணுவதற்கு...
Read More

Nimali Buthpitiya
விளையாடுவதற்கு கேட்டால் "சரி" என்று சொல்லுங்கள்!
பல ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோருடன் விளையாட்டு தொடர்பாக விவாதிக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை, ஏனெனில் விளையாட்டு இயற்கையாகவே ஒரு குழந்தையின் அன்றாட வாழ்க்கையின் ...
Read More

Nimali Buthpitiya
உங்கள் மூன்று வயதே நிரம்பிய அன்புக்கினிய குழந்தைளை அறிந்து வளர்த்திடுங்கள்
மகிழ்ச்சியின் மொத்த உருவமான உங்கள் 3 வயது நிரம்பிய செல்லக் குழந்தை மிக வேகமாக வளர்கின்றனர், அத்துடன் அவர்களால் ஒரு நிமிடம் கூட அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்திருக...
Read More