























விளையாடுவதற்கு கேட்டால் "சரி" என்று சொல்லுங்கள்!

Nimali Buthpitiya
பல ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோருடன் விளையாட்டு தொடர்பாக விவாதிக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை, ஏனெனில் விளையாட்டு இயற்கையாகவே ஒரு குழந்தையின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது. இருப்பினும், ஆண்டுகள் கடந்துவிட்டன, இப்போது இது குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு பற்றி பேசும் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
விளையாட்டு அடிப்படையிலான கற்றல் குழந்தையின் கற்றல் மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் செல்வாக்கு செலுத்துகிறது என்பதை ஒரு பெரிய ஆய்வு நிரூபித்துள்ளது. ஒரு குழந்தை விளையாட்டின் மூலம் தனது கற்றலை எவ்வாறு வளர்த்துக் கொள்வர்? அல்லது விளையாட்டில் ஈடுபடும் குழந்தையும் அதே நேரத்தில் எப்படிக் கற்றுக் கொள்வர்?
சிறு குழந்தைகளுக்கு தாங்கள் வாழும் சூழலைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வு இருக்கிறது. ஆனாலும் அது பெரியவர்கள் நாங்கள் ஏதேனும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதை போல் அல்ல. அவர்கள் முழுமையான ஈடுபாட்டுடன் இருக்கும்போது, மன ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கும்போது, சுற்றுச்சூழலுடனும், சுற்றியுள்ள மக்களுடனும் ஈடுபடும்போது அவர்கள் நன்றாகக் கற்றுக்கொள்கிறார்கள். விளையாட்டின் கருத்தாக்கமானது ஒரு குழந்தையை முழுமையாக ஈர்த்து, மனரீதியாக சுறுசுறுப்பாக வைத்திருக்கும் மற்றும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக அவர்கள் வாழும் உலகத்துடன் இணைக்கும் திறன் கொண்டது எப்போதும் வழங்க முடியாது. எனவே விளையாட்டானது, சமூக, உணர்ச்சி மற்றும் உடல் திறன்கள் போன்ற பிற அம்சங்களை உள்ளடக்கிய குழந்தையின் அறிவுசார் திறன்களைக் கூர்மைப்படுத்துவதில் ஒரு குழந்தை தனது மூளையைக் கூர்மைப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபடுகிறது. இதைத்தான் நாம் விளையாட்டு அடிப்படையிலான கற்றல் என்று விளக்குகிறோம்.
மூளை வளர்ச்சியைத் தவிர விளையாட்டின் மற்ற நன்மைகள் என்ன?
- இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- இது இயற்கையாகவே மன அழுத்த நிவாரணி மற்றும் குழந்தைகளுக்கு இருக்கும் சில கவலைகள் மற்றும் அச்சங்களுக்கு ஒரு வழியை வழங்குகிறது.
- புதிதாகப் பெற்ற திறன்களைப் பயிற்சி செய்வதற்கும், அவற்றை நன்றாக மாற்றுவதற்கும் இது குழந்தைகளுக்கு வாய்ப்பளிக்கின்றது.
- சோதனை மற்றும் பிழை மூலம் ஆக்கப்பூர்வமான சிந்தனை மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களை விளையாட்டு ஊக்குவிக்கிறது.
- தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி அவர்கள் பெறும் சமூக தொடர்புகள் மற்றும் அறிவின் மூலம் சுய கட்டுப்பாட்டின் வளர்ச்சியை விளையாட்டு ஆதரிக்கிறது.
- குழந்தைகள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது மற்றும் அவர்களுக்கான பணிகளைச் செய்யும் திறன் கொண்டவர்களாக மாறுவதால், விளையாட்டு தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதையை வளர்க்க உதவுகிறது.
குழந்தைகள் விளையாட்டின் மூலம் கற்றுக்கொள்ள பெற்றோர்களாகிய நமது பங்களிப்பு எவ்வகையானது?
சுறுசுறுப்பாக இருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி நாம் நம்புவதும் அறிந்திருப்பதும், நம் குழந்தைகள் தங்கள் அன்றாட நடைமுறைகளை எப்படிச் செலவிடுகிறார்கள் என்பதுடன் நேரடியாகத் தொடர்புபடுத்துகிறது. எனவே, பரபரப்பான வாழ்க்கை முறையுடன், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பராமரிக்க நாம் மேலும் முயற்சி செய்ய வேண்டும், இதனால் நம் குழந்தைகளுக்கு அன்றாட வாழ்க்கையில் சுறுசுறுப்பாக இருப்பதன் முக்கியத்துவத்தை முன்மாதிரியாகக் கொள்ள முடியும். அவர்கள் தங்கள் சுறுசுறுப்பான வாழ்க்கையைப் பார்த்து வளரத் தொடங்கும் போது, அவர்களை ஆதரவான வார்த்தைகளால் ஊக்குவிப்பதோடு, அவர்களுக்குத் தேவையான விளையாட்டுப் பொருட்கள் மற்றும் சுறுசுறுப்பாக இருக்க இடவசதியினையும் வழங்குங்கள். எல்லா நேரங்களிலும் நீங்கள் அவர்களின் விளையாட்டில் ஈடுபடுவது அவசியமில்லை, ஆனால் அவர்கள் விளையாடும் போது உடனிருப்பது அவர்கள் விளையாடும் நேரங்களில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை உணர வைக்கிறது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எல்லா நேரங்களிலும் கண்காணிப்பு அவசியம்.
உங்கள் பிள்ளைகள் விளையாட்டின் மூலம் கற்றலை மேற்கொள்ளும் போது குடும்பச் சூழல் ஒரு முக்கியமான காரணியாகும். விளையாட்டில் ஈடுபடும் குழந்தை மீதான உங்கள் அணுகுமுறை, உங்களின் ஆதரவான வார்த்தைகள் மற்றும் அச்சுறுத்தாத சூழல் ஆகியவை குழந்தையைச் சுற்றியுள்ள உலகத்தை சுதந்திரமாக ஆராயவும், பிற்காலத்தில் கற்றலுக்கு உதவும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்கிறது. எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள், அவர்கள் கற்றுக்கொள்ள முயற்சிக்கும் விடயங்களுடன் அர்த்தமுள்ள தொடர்பைக் கொண்டிருக்கும் போது குழந்தைகள் சிறப்பாகக் கற்றுக்கொள்கிறார்கள்.
"தீவிரமான கற்றலில் இருந்து விடுபடுவது போல் விளையாட்டு அடிக்கடி பேசப்படுகிறது. ஆனால் குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது தீவிரமான கற்றல். விளையாட்டு உண்மையில் குழந்தைப் பருவத்தின் வேலை"
பிஃறட் ரோஜர்ஸ்
நினைவில் கொள்ள வேண்டிய குறிப்புகள்;...
- சுறுசுறுப்பான வாழ்க்கை முறையின் முன்மாதிரியாக இருங்கள்
- உங்கள் குழந்தை விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட தேவையான நேரத்தையும் இடத்தையும் அனுமதித்தல்
- அவர்களின் திறன்களில் அடுத்த நிலைக்கு முன்னேற்றம் பெறுவதற்கு வயதுக்கு ஏற்ற விளையாட்டுப் பொருட்களை வழங்குங்கள்.
- அவர்கள் விளையாடும் நேரத்தில் புதிய விஷயங்களை ஆராய முயற்சிக்கும்போது ஆதரவாக இருங்கள்
- எப்பொழுதும் கண்காணித்து அவர்களைச் சுற்றி இருங்கள், அவர்களின் விளையாட்டு நடவடிக்கைகளில் உங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்துங்கள்
- அவர்களின் விளையாட்டு நடவடிக்கையில் அவர்களுக்கு நீங்கள் தேவைப்படும் நேரங்களில் ஈடுபடுங்கள்
- விளையாட்டின் போது அவர்களின் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - அது உங்களுக்குத் தெரிந்ததை வழங்குவதற்கான சிறந்த வாய்ப்புகளாகவும் அமையும் .
- பாதுகாப்பாக இருக்கும் தருணங்களில் எல்லாம் சோதனை மற்றும் தவறுகள் மூலம் கற்றுக்கொள்ள அவர்களை அனுமதியுங்கள்.
- உங்கள் பிள்ளை அதே வயதில் உள்ள மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட அனுமதியுங்கள்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles


Dinusha Manjarie Wickremesekera
வேலைகள் மற்றும் ப ொறுப்புகள்: வீட்டில் உதவுதல்
பெரியவர்களாகிய நாம் சுதந்திரமாக நம்மமக் கவனித்துக் பகாள்ளவும், ஒரு வீட்மை நைத்தவும், ஒரு குடும்ெத்மத நைத்தவும், ஒரு வவமைமய வமற்பகாள்ளவும் , உறவுகமளப் வெணுவதற்கு...
Read More

Nimali Buthpitiya
உங்கள் மூன்று வயதே நிரம்பிய அன்புக்கினிய குழந்தைளை அறிந்து வளர்த்திடுங்கள்
மகிழ்ச்சியின் மொத்த உருவமான உங்கள் 3 வயது நிரம்பிய செல்லக் குழந்தை மிக வேகமாக வளர்கின்றனர், அத்துடன் அவர்களால் ஒரு நிமிடம் கூட அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்திருக...
Read More

Nimali Buthpitiya
உங்கள் குழந்தையின் சமூக தொடர்புகளை மீண்டும் வளர்த்துக்கொள்ள உதவிடுவோம்
தொற்றுநோய் காலத்தின் பின் மீண்டும் நமது புதிய இயல்பு வாழ்க்கைக்கு மாறியுள்ளோம். எதிர்காலம் நிச்சயமற்றதாக இருந்தாலும், வாழ்க்கை பயணத்தை சிறந்த முறையில் மீண்ட...
Read More