உங்கள் குழந்தையின் சமூக தொடர்புகளை மீண்டும் வளர்த்துக்கொள்ள உதவிடுவோம்
Nimali Buthpitiya
தொற்றுநோய் காலத்தின் பின் மீண்டும் நமது புதிய இயல்பு வாழ்க்கைக்கு மாறியுள்ளோம். எதிர்காலம் நிச்சயமற்றதாக இருந்தாலும், வாழ்க்கை பயணத்தை சிறந்த முறையில் மீண்டும் தொடங்க ஒவ்வொரு நாளும் படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகும். சிறுகுழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு இது மீண்டும் சவாலானதோர் நேரம். அவர்கள் குறித்ததோர் காலம் வீட்டுக்கல்வியில் ஈடுபட்டுள்ளதோடு, இப்போது மீண்டும் பள்ளிப்படிப்பைத் தொடங்கும் நேரம் வந்துவிட்டது. ஒவ்வொரு விடுமுறைக்கு பிறகும் பள்ளிக்குச் செல்வதில் நம் பிள்ளைகள் சங்கடமாகவும் எரிச்சலுடனும் இருப்பதை நாம் வழமையாக அவதானிப்பதே. மேலும் அவர்கள் பள்ளியின் சுவாரசியமான தருணங்களை தவறவிட்டுள்ளதோடு, சுற்றுச்சூழலுக்கு பரிச்சயமற்றவர்களாகவும், நட்புறவற்றவர்களாகவும் சிறிது காலம் காணப்படுவார்கள். நாட்டில் நடைமுறையில் இருந்த சமூக விலகல் விதிகள் காரணமாக அவர்கள் நீண்ட காலமாக அனைத்து சமூக தொடர்புகளிலிருந்தும் தொலைவில் இருந்தமையே இதற்கான காரணமாகும்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மெய்நிகர் தொடர்புகள் ஊடாக மட்டுமே தொடர்பு கொண்டிருப்பார்கள்.
எவ்வாறாயினும், மாறுப்பட்ட இக் காலத்தில் குழந்தைகளுக்கு மேலதிகமானதோர் ஆதரவு அவசியம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதனால் அவர்கள் பெரியவர்களைப் போலவே தங்கள் வழக்கமான நடைமுறைகளுக்குத் இலகுவாக திரும்பிட முடியும். அவர்களின் சமூகத் தொடர்புகளை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு ஆதரவளிப்பதோடு, குழந்தைகளின் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு ஊக்கமளிப்பதற்கும், மீண்டும் உற்சாகப்படுத்துவதே நாம் எடுக்கக்கூடிய ஆரம்ப நடவடிக்கைகளில் முக்கியமானதாகும். நண்பர்கள் மற்றும் சகாக்களுடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்திடல் சிறந்ததாகும். இது அவர்கள் மற்ற வேலைகளை வெற்றிகரமாக தொடங்குவதற்கு உந்துதலாக அமையும்.
உங்கள் குழந்தைகளை மீண்டும் சமூகத்திற்கு பழகிட பெற்றோராக நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில குறிப்புகள் இதோ...
- உங்கள் குழந்தை மற்றவர்களுடன் பங்கேற்கக்கூடிய புதிய செயற்பாடுகளை ஏற்பாடு செய்யுங்கள்.
செயற்பாடுகள் சமூக தொடர்புகளை மேம்படுத்திடும் அற்புதமான வாய்ப்பாகும்;. விடுமுறை நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் குழந்தைகள் அக்கம் பக்கத்திலோ அல்லது பள்ளியிலோ தங்கள் நண்பர்களுடன் விளையாடுவதற்கான வாய்ப்புகளை வழங்கலாம். நட்பை மீண்டும் உருவாக்க, புதிய நண்பர்களைச் சந்திக்க பெற்றோர்கள் அவர்களை குழு விளையாட்டு அல்லது விளையாட்டுக் கழகங்களுக்குச் சேர்க்கலாம். இது அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
- அவர்கள் சிறந்த தொடர்பாளர்களாக மாற உதவுங்கள்
குழந்தைகள் சிறந்த தொடர்பாளர்களாக மாறும்போது சமூக திறன்கள் மேம்படுகின்றன. உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது சமூக வளர்ச்சியின் முக்கிய அங்கமாகும். இசை, நடனம் அல்லது ஓவியம் போன்ற அழகியல் நடவடிக்கைகளில் சிறப்பு ஆர்வத்தை வெளிப்படுத்தும் குழந்தைகளும் அதே ஆர்வங்களைப் பகிர்ந்து கொள்ளும் குழந்தைகளும்; குழுக்களாக சேரந்து ஊக்குவிக்கப்படலாம். புதிய வகுப்புகள், கிளப்கள் அல்லது பள்ளி நேரத்திற்கு வெளியே உள்ள அவர்களது சகாக்களுடன் பெற்றோர்களும் சேர்ந்து, அவர்கள் மிகவும் ரசிக்கும் செயல்களில் ஈடுபடலாம். எண்ணங்கள், கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், ஒருவருக்கொருவர் நட்பை வளர்ப்பதற்கும் இது ஒரு சிறந்த இடமாக அமைந்திடும்;.
- திறந்த விவாதங்கள்
தினமும் உங்கள் குழந்தையுடன் திறந்த விவாதங்களை மேற்கொள்ளுங்கள். அவர்கள் விரும்பிய மற்றும் விரும்பாததைப் போலவே அவர்களின் நாளைப் பற்றியும் பேசிடுங்கள். அவர்களின் குறைகளைக் கேட்டு, அவற்றை ஏற்றுக்கொண்டு, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்திடங்கள். இது உங்கள் குழந்தைக்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்து, பலப்படுத்தவும், ஆதரவளிக்கவும பக்கபலமாக அமைந்திடுவதோடு, சமூக திறன்கள் உட்பட அவர்களின் வளர்ச்சியை மேம்படுத்தவும் இது உதவிடும்.
- குடும்ப நேரம், சுற்றுலாக்கள் மற்றும் விருந்தினர்
தொற்றுநோய் சமூக உறவுகளை தொலைதூரமாக்கியது, திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் மற்றும் பயணங்கள் ஒத்திவைக்கப்பட்டது. குழந்தைகள் தங்கள் உறவினர்கள் மீண்டும் வீட்டிற்கு வருவதை அல்லது ஒத்திவைக்கப்பட்ட குடும்ப உல்லாசப் பயணத்திற்கு விரைவில் செல்வதை மிகவும் விரும்புவார்கள். பெற்றோர்கள் மீண்டும் வேலைப்பளுவுடன் இருப்பது அவர்களை மேலும் வருத்தமடையச் செய்வதோடு, அவர்கள் காத்திருப்புகள்; நம்பிக்கையை இழக்க நேரிடும். எனவே, தினசரி வேலைப்பளுவுடன் இருந்தாலும் உங்கள் குடும்பத்துடன் ஒன்றாக இருக்க மறக்காதீர்கள். குழந்தைகளுடன் இருக்கும் உறவினர்களை வீட்டிற்கு அழைத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றி ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வுகள் அல்லது உல்லாச பயணங்களை மீண்டும் திட்டமிடுங்கள். குழந்தைகள் தங்கள் இயல்பான மற்றும் ஆரோக்கியமான மனநிலைக்கு திரும்புவதற்கு ஊக்கமளித்திட இதுவே விலைமதிப்பற்ற வாய்ப்புகளாகும்.
மேலே உள்ள உதவிக்குறிப்புகளைத் தவிர, வீட்டிலும் பள்ளியிலும் உங்கள் குழந்தையின் தினசரி வழக்கத்தை கண்காணிப்பது முக்கியமானதாகும். உங்கள் பிள்ளையின் ஆசிரியர்களுடன் தொடர்பில் இருங்கள், அவர்கள் பள்ளியில் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிந்திடுங்கள். இது உங்கள் குழந்தைக்கு மேலும் உதவிட துணையாக அமையும். தொற்றுநோய் அனைவருக்கும் ஒரு கடினமான நேரத்தைக் கொண்டு வந்துள்ளது, ஆனால் உங்கள் குழந்தைகளை உங்களால் முடிந்தவரை கவலைகள் மற்றும் மன அழுத்தங்களிலிருந்து பாதுகாத்திடுங்கள். அதே நேரத்தில் உங்கள் மன மற்றும் உடல் நலனில் கவனம் செலுத்துங்கள். குழந்தைகளுடனான உங்கள் உறவை சரியாக வைத்துக்கொள்வது, உங்கள் பிள்ளைகள் மீண்டும் வெளி உலகத்துடன் உறவுகளை உருவாக்குவது பற்றி சிந்திக்க மிகப்பெரிய உந்துதலாக அமையும்;
உதவிக்குறிப்பு:
பெற்றோர்களாகிய உங்கள் தொடர்புகள் மற்றும் நடத்தைகள் குழந்தைகளின் மீது சிறந்த தாக்கங்களை உருவாக்கும் அதே வேளையில், சமூக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதும உங்களின் பொறுப்பே.
ஏனையோருடன் பகிர
Recommended Articles
Dinusha Manjarie Wickremesekera
வேலைகள் மற்றும் ப ொறுப்புகள்: வீட்டில் உதவுதல்
பெரியவர்களாகிய நாம் சுதந்திரமாக நம்மமக் கவனித்துக் பகாள்ளவும், ஒரு வீட்மை நைத்தவும், ஒரு குடும்ெத்மத நைத்தவும், ஒரு வவமைமய வமற்பகாள்ளவும் , உறவுகமளப் வெணுவதற்கு...
Read MoreNimali Buthpitiya
விளையாடுவதற்கு கேட்டால் "சரி" என்று சொல்லுங்கள்!
பல ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோருடன் விளையாட்டு தொடர்பாக விவாதிக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை, ஏனெனில் விளையாட்டு இயற்கையாகவே ஒரு குழந்தையின் அன்றாட வாழ்க்கையின் ...
Read MoreNimali Buthpitiya
உங்கள் மூன்று வயதே நிரம்பிய அன்புக்கினிய குழந்தைளை அறிந்து வளர்த்திடுங்கள்
மகிழ்ச்சியின் மொத்த உருவமான உங்கள் 3 வயது நிரம்பிய செல்லக் குழந்தை மிக வேகமாக வளர்கின்றனர், அத்துடன் அவர்களால் ஒரு நிமிடம் கூட அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்திருக...
Read More