தாளத்துக்கேற்ற நடனம்
தாளத்துக்கேற்ற நடனம் ஒன்றாக உட்கார்ந்து பேசுவது அல்லது ஒரு புத்தகத்தைப் படிப்பது போன்றவை உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதற்கான வழியாகும். ஆனால் குழந்தைகள் அசைவுகளை வெளிப்படுத்தவும் , நடனமாடவும், குதித்து ஓடவும் விரும்புகிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த அத்தியாவசிய திறன்களை செம்மைப்படுத்தும் போது, அவர்களுடன் இணைந்துகொள்வதற்கு இதுவே சரியான வாய்ப்பாக அமையும். இதன் மூலம் அவர்களின் திறன்களையும் மெருகேற்ற முடியும்.
படிமுறை 1: உற்சாகமான தாளத்துடன் கூடிய குழந்தைகளின் பாடல்களை ஒலிக்கச் செய்யுங்கள்.
படிமுறை 2: உங்கள் குழந்தையுடன் நடனமாடுங்கள், நீங்கள் செய்யும் அசைவுகளை அவர்களால் பின்பற்ற முடியுமா எனப் பாருங்கள்.
படிமுறை 3: இச்செயல்பாட்டில், அவர்களின் சமநிலையை பேணவும், ஒரு நிலையில் நிற்கவும் முயற்சிக்க அனுமதியுங்கள்.
படிமுறை 4: பின்னர் படிப்படியாக, உங்கள் குறுநடை போடும் குழந்தையை குதிக்கவும் இசையின் தாளத்திற்கு கைதட்டவும் ஊக்குவியுங்கள்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles
பலூன்களுடனான வேடிக்கை விளையாட்டு
பெரும்பாலான குழந்தைகள் பலூன்களால் ஈர்க்கப்படுகிறார்கள். வெவ்வேறு வர்ணங்கள் மற்றும் அவற்றை நீங்கள் பவுன்ஸ் செய்து பிடித்து விளையாடும் போது, அது உங்கள் பிள்ளையை ந...
Read More