Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

உறுதியாக இருங்கள் தனித்துவமாக இருங்கள்

Dinusha Manjarie Wickremesekera

குழந்தைகளின் சுதந்திரமான செயற்பாடுகளை வளர்த்தெடுப்பதில்

 

உங்கள் பிள்ளைகள்  இயல்பாக  நடக்கத் தொடங்கும் வரையில் , அவர்களால் உங்களது உதவியின்றி நடக்க இயலுவதில்லை   - ஆனால் குழந்தைகள் சரிவர நடக்க ஆரம்பித்தவுடன் உங்கள் உதவியை தவிர்த்துவிட்டு  அவர்கள் விரும்பிய இடத்திற்கெல்லாம்  ஓடிவிடத் தயாராக இருப்பார்கள் .   உணவு விடயத்திலும் இதை நீங்கள் அவதானிக்கலாம் .. ஆரம்பத்தில்  அவர்களால் உணவினை சரியான முறையில்  உண்ண முடிவதில்லை , ஆனால் கைகள்,  தசைகளின்  இயக்கம் மற்றும் கை-கண் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேம்படுத்த முடிந்தவுடன், எங்கள் சிறு குழந்தைகளுக்கு  கரண்டியைப் பிடித்து உண்ணுவதற்கான கைப்பக்குவம் இயல்பாகவே வந்துவிடுகின்றது . அநேகமாக  ஆரம்பத்தில் எல்லா இடத்திலும் சிந்தும்வகையில் உண்ண ஆரம்பித்திருந்தாலும் ,நாளடைவில் கைப்பக்குவம் ஏற்பட்டவுடன்  அவர்களை மிஞ்ச யாருமில்லை என்கிற அளவிற்கு அதில் அவர்கள் தேர்ச்சி பெற்றுவிடுகின்றனர்  .

 

நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நமது பிள்ளைகள்  வளர்ந்து விடுகின்றார்கள் என்று சொல்கின்றோம் !   பால் போத்தலைப் பிடித்துக்கொள்வதிலிருந்து   என்ன அணிய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதுவரை அவர்கள் தன்னிச்சையாக சுதந்திரமாக சில விடயங்களை செய்வதனை அடிப்படையாகக்கொண்டே  நாம் அவ்வாறு கூறுகின்றோம் .  குழந்தைகள் வளரும்போது, அவர்களின் திறன்கள் மற்றும் அவர்களுக்கு அனுமதிக்கப்படும் இடத்தைப் பொறுத்து, வெவ்வேறு அளவுகளில் தங்கள் சுதந்திர உணர்வை உறுதிப்படுத்துகிறார்கள். பெற்றோர்கள் இவ்விடத்தில் சற்று பின்வாங்கவேண்டியுள்ளது . அவர்களின் குழந்தைகள் தங்கள்  கையைப் பிடிக்காமல் நடப்பதைப் பார்வையிடுவது , நீங்கள் அவர்களுக்காக  ஏற்பாடு செய்துகொடுத்த இடத்திலிருந்து அவர்கள் தங்கள் உணவினை உண்ணுவதைப் பார்வையிடுவது , அவர்களுக்காக நீங்கள் இப்போதும் செய்யலாம் என எண்ணுகிற விடயங்களை அவர்களாகவே மிக தேர்ச்சியுடன் செய்வதை அவதானிப்பது போன்ற விடயங்களை பின்நின்று பார்iயிடலாம். . ஒரு குழந்தையை வளர்ப்பதென்பது  குழந்தைகளை இந்த தேர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்வதேயாகும் .

 

உணர்ச்சி மட்டத்திலும், உங்கள் குழந்தை  உங்களது அருகாமையிலிருந்து சற்று விலகி  நீண்ட நேரங்களை செலவழிப்பர். ஆனால் எப்போதுவேண்டுமானாலும் அது உங்களிடம் திரும்பிவந்துவிடுவர். அவர்கள் சற்று பெரியவர்களாகும்போது  உங்களைக் கட்டிப்பிடிப்பது குறைவாக இருக்கும், ஆனால் அவர்கள் அவர்களுக்கேற்படும் தோல்விகளில் இருந்து மீளவேண்டியேற்படும்போது நீங்கள் அவர்களுக்காக இருப்பதைக்கண்டு உங்களை இன்னும் அதிகமாக நேசிப்பார்கள் .   சுயமாக தங்களது விடயங்களை செய்துகொள்வதென்பது குழந்தைகளுக்குச் சாதனை உணர்வைத் தருவதோடு, அவர்களின் சுய உணர்வு மற்றும் சுயமரியாதையையும் மேம்படுத்துகிறது.

 

எந்தவொரு விடயத்தினையும்   செய்துகொள்வது  மற்றும் தாங்களாகவே முடிவுகளை எடுப்பது போன்ற சுதந்திரத்திற்கான குறிக்கோள் சிறு வயதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது  . பெற்றோராகிய நாம்,  மற்றவர்களின் ஆதிக்கமின்றி  அல்லது கட்டுப்பாட்டிற்கு வெளியே "சுயமாக செயற்படுவது எப்படி " என்ற இந்த இலக்கை எவ்வாறு அங்கீகரிக்க  முடியும்? உளவியலாளர் வைகோட்ஸ்கி (Vygotsky)  முன்வைத்த ஒரு சிறந்த மூலோபாயம், குழந்தைகளுக்கு நாம் எல்லாவற்றையுமே கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்க வேண்டும்  என்கிற எண்ணத்தினை விடுத்து , ஒரு குழந்தை தேர்ச்சி பெறும்போது தேவைப்படும் போது உதவியினை வழங்குதல் அல்லது மேற்பார்வை செய்தல் போன்றவற்றின் மூலம் நாம் இதனை செய்யலாம்.

 

அதனை எவ்வாறு செய்யலாம் :

 

 

யூகிக்கக்கூடிய நடைமுறைகளை அமைக்கவும் - இவ் நடைமுறையானது   அடுத்து என்ன நடக்கும் என்பதைக் கணிக்க உதவுகிறது மேலும் , மீண்டும் மீண்டும் செய்யும் செயல்கள் பழக்கவழக்கங்களை  உருவாக்குகின்றன - நிலையாயிருத்தல் மற்றும் என்ன எதிர்பார்ப்பது என்பதை அறிந்துக்கொள்ளல் குழந்தையை பாதுகாப்பாக உணர வைக்கிறது. எதிர்பாரக்கப்பட்ட இக் கட்டமைப்பிற்குள் ஒரு குழந்தைக்கு தான்  என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது தெரியும், மேலும் ஒவ்வொரு விடயத்தினையும்  எப்படிச் செய்வது என்பதை உள்வாங்க உதவும் வகையில்  சிறிய கட்டளைகளை  அவர்களுக்கு  கொடுப்பதன்மூலம் இதனை நீங்கள் ஆரம்பிக்கலாம் . ஆரம்பத்தில் உங்கள் பிள்ளை உங்கள் வழிகாட்டுதலின் கீழ் இந்தப் பணிகளைச் செய்து முடிப்பார்கள்.பின்னர் அவர்களாகவே செய்வார்கள்.

 

உங்கள் குழந்தைகளை தேர்வு செய்ய அனுமதியுங்கள் :

 

எந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் - எந்தத் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்பதை உங்கள் குழந்தை தேர்வு செய்யட்டும். இதன் மூலம் உங்கள் குழந்தை விமர்சன சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்கிறது. பாடசாலை அல்லது விருந்துக்கு அணிவதற்கு பொருத்தமான ஆடைகளைத் உங்களின் வழிகாட்டுதலுடன் உங்கள் பிள்ளை தீர்மானிப்பதன் மூலம் பெற்றோராக , சில எல்லைகளை அமைக்க உங்களை அனுமதிக்கிறது

 

 

தவறுகள் கற்றலுக்கான  அனுபவங்கள் -

 நாம் அனைவருமே  நடைமுறையிலிருந்தும்  ,  தவறுகளிலிருந்தும்    கற்றுக்கொள்கிறோம் - குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை எப்போதுமே நாம் உறுதிசெய்துகொள்ளவேண்டும் . ஒரு விடயத்திலிருந்து சட்டென மீள்வதென்பது தாக்குப்பிடிக்கும் தன்மையினை அதிகரிக்கும் .  - ஒரு பெற்றோராக குழந்தைகள் உங்களுக்கே உரித்தானவர்கள் .  உங்கள் குழந்தையுடன் அவர்களின் நாளைப் பற்றி பேசுங்கள்.கடினமான மற்றும் பாராட்டுக்குரிய அவர்களது தருணங்களைப் பற்றி கலந்துரையாடுங்கள் .

 

உங்கள் குழந்தை தன்னை வெளிப்படுத்த அனுமதியுங்கள்  – அவர்களது  விருப்பு வெறுப்புகள், அச்சங்கள் மற்றும் மகிழ்ச்சிகள் போன்றவற்றை வெளிப்படுத்துவது  மற்றும் உங்களிடம்  அவர்கள் தங்கள்  கருத்துக்களைப் பகிர்வது, அவர்களின் கருத்துக்களை நீங்கள் கேட்பது போன்றவை  உங்கள் குழந்தையுடனான உங்கள் உறவையும் அவர்களது  சுயமரியாதை உணர்வையும் வளர்க்கும்.

 

விளையாட்டு  -  விளையாட்டு மிகவும் முக்கியமானது - சுயாதீனமாக விளையாடுதல் , கற்பனையான விளையாட்டு - கட்டமைக்கப்பட்ட விளையாட்டு, உங்களுடன் சேர்ந்து  விளையாடுவது, தாங்களாகவே தனித்து விளையாடுவது, போன்ற அனைத்துமே அவர்களது தருணங்களை வேடிக்கையாகச் செயல்படுத்த அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.

 

 

இது குழந்தைக்கு வெறுப்பாக இருக்கும், ஏனென்றால்  திறன்களில் தேர்ச்சி பெற நேரம் எடுக்கும். ஆனால் இது மிகவும் முக்கியமான தருணம், ஏனெனில் உங்கள் குழந்தை தேர்ச்சி பெறப் போகிறது. உங்கள் குழந்தைக்கு "நான் அதை செய்தேன்!" என்று கூறும் முதல் வெற்றிகரமான தருணங்களாக அவை அமையப் போகின்றன.

 

உதவிக்குறிப்பு:

என் குழந்தை மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

என் குழந்தை தன்னிச்சையாக சுயமாக விடையங்களை  செய்கிறது.

 

இந்த தேர்ச்சியின்  ஏமாற்றமளிக்கும் செயற்பாடுகளெல்லாம்  எனக்கு நினைவில் இல்லை ஆனால் நான் ஆதரிப்பேன்.

 

ஆழமாக சுவாசிக்கவும், முழுமையாக சுவாசிக்கவும் பெற்றோர்களுக்குரிய இந்த மந்திரத்தை மீண்டும் மீண்டும் முயற்சிக்கவும் . உங்களுக்கு இது புரிந்திருக்கும்

 

 அல்லது

 

உதவிக்குறிப்பு 2:

இந்த இளம் பருவத்தில் உங்கள் குழந்தையுடன் நீங்கள் வளர்த்துக் கொள்ளும் உறவு, அவர்களின் டீனேஜ் மற்றும் இளமைப் பருவத்தில் கூட உங்கள் உறவின் தன்மை இயல்பானதாக இருக்க உதவிடும். நீங்கள் விதிமுறைகளை அமைக்கும்போது உங்கள் உறவும் வளரும், ஒத்துழைப்பின் ஒன்றாக ஒரு சில நெகிழ்வுத்தன்மையுடன் அவற்றை கடைபிடியுங்கள். உங்கள் போராட்ட குறிக்கோளை தேர்ந்தெடுப்பது முக்கியம், ஏனெனில் விதிமுறைகளை அமைப்பதற்கு மீண்டும் தள்ளப்படுவீர்கள்.

Recommended Articles