Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

சுயமரியாதை மற்றும் மீண்டெழும் தன்மை - ஆகிய இரண்டும் முக்கியமா?

Nimali Buthpitiya

உங்கள் குழந்தை தனது உடலை அசைத்து சிறிய விடயங்களைச் செய்யக்கூடிய வயதிலிருந்தே தனது ஆளுமையை வளர்த்துக் கொள்ளத் தொடங்குகிறது. இந்த குறிப்பிட்ட பகுதியின் வளர்ச்சியானது, குறிப்பாக மூன்று முதல் ஐந்து வயது வரையிலான காலப்பகுதியில் அதிக அளவில் தென்படுவதோடு மேலும் மேலும் செயற்படும். பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைக்கு ஆரோக்கியமான உணவை ஊட்டுவது மற்றும் சிறந்த கல்வியை வழங்குவதுடன், உங்கள் பிள்ளையின் ஆளுமையை மிக முக்கியமான குணாதிசயங்களுடன் வளப்படுத்துவதற்கு நேரத்தையும் முயற்சியையும் முதலீடு செய்ய இது ஒரு முக்கியமான காலகட்டமாகும். சுயமரியாதை மற்றும் மீண்டெழும்தன்மை ஒரு பிள்ளையின் ஆளுமையில்  முக்கியமாக 'இருக்க வேண்டிய' இரண்டு பண்புகளாக கூறலாம்.

சுயமரியாதை மற்றும் மீண்டெழும்தன்மை என்றால் என்ன?

சுய மதிப்பு அல்லது ஒட்டுமொத்த மதிப்பின் உணர்வு ஒரு நபர் தனது சுயத்தின் மீது வைக்கும் சுயமரியாதை என்று அழைக்கப்படுகிறது. மீண்டெழும்தன்மை என்பது சிரமங்களிலிருந்து விரைவாக மீள்வதற்கான ஒருவரின் திறனைக் குறிக்கிறது. இந்த இரண்டு குணங்களையும் சில வார்த்தைகளால் எளிதில் வரையறுக்க முடியும் என்றாலும், அவற்றை வளர்ப்பதற்கு அதிக நேரமும் முயற்சியும் தேவைப்படுகின்றது.

 

சுயமரியாதை மற்றும் மீண்டெழும்தன்மை ஏன் மிகவும் முக்கியமானது?

இந்த இரண்டு குணங்களும் இல்லாத நிலையில், ஒரு குழந்தை தன்னம்பிக்கை இல்லாமல் அல்லது புதிய விஷயங்களைச் செய்வதில் ஆர்வத்தை இழக்கத் தொடங்கிவிடுவர். அவர்கள் ; உதவியற்ற உணர்வையும் தோல்வி பயத்தையும் வளர்த்துக் கொள்வார்கள். குறைந்தளவிலான சுயமரியாதை மற்றும் மீண்டெழும்தன்மை கொண்ட குழந்தைகள் தங்களைப் பற்றி எதிர்மறையான அறிக்கைகளை வெளியிடும் சவால்களை விரைவில் கைவிட முனைகிறார்கள். சில குழந்தைகள் சமூக ரீதியாக பின்வாங்கலாம், மிகவும் அதிகாரத்தன்மையானவர்களாகவும் மாறலாம் (தங்களின் உணர்வுகளை அல்லது சக்தியின்மை அல்லது குறைபாடுகளை மறைக்க ) அல்லது அடாவடித்தனங்களை செய்ய ஆளாகலாம். இதுபோன்ற நடத்தைகள் அல்லது குணங்கள் உங்கள் குழந்தை தொடர்ந்தால் அவர்களின் நல்வாழ்வுக்குத் தடையாக இருக்கும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

 

பெற்றோர்களால் எவ்வாறு சுயமரியாதையை வளர்க்க முடியும்? பின்வரும் குறிப்புகள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்!

ஒவ்வொரு வயது நிலையிலும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் செய்யவும் குழந்தைகளுக்கு உதவுங்கள்.

உங்கள் பிள்ளையின் பலத்தில் கவனம் செலுத்துங்கள்

கடுமையான விமர்சனங்களைத் தவிர்க்கவும்

நல்ல முன்மாதிரியாக இருங்கள்

அவர்களின் முயற்சிக்காக புத்திசாலித்தனமாக அவர்களைப் பாராட்டுங்கள்

பிழைகளை விடுவதும் பரவாயில்லை என அவர்கள் எப்போதும் உணரட்டும்

அவர்களின் வயதை பார்க்காமல் அவர்களை மதிக்கவும்

அவர்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைக் கேட்டு அவற்றை அங்கீகரிக்கவும்

 

 

பெற்றோர்களால் எவ்வாறு மீண்டெழும்தன்மையை உருவாக்க முடியும்?

அவர்களின் நிர்வாக செயல்பாட்டை கட்டியெழுப்புங்கள.;

இது அறிவாற்றல் திறன்களின் அடிப்படையில் குழந்தையின் திறன்களை வளர்ப்பதை உள்ளடக்குகிறது. அவர்களின் நிர்வாகச் செயல்பாட்டைக் கட்டியெழுப்புவதன் மூலம், அது அவர்களின் நடத்தை மற்றும் உணர்வுகளை ஒழுங்குபடுத்தவும், சிக்கலைத் தீர்ப்பதில் அவர்களின் திறன்களை அதிகரிக்கவும் உதவுகிறது. நடைமுறைகளை உருவாக்குவதன் மூலம், எளிய முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், அவர்களின் சொந்த சமூக தொடர்புகளை வளர்த்துக் கொள்ள அனுமதிப்பதன் மூலம், சிந்தனை மற்றும் சுதந்திரமாக செயல்படுவதை ஊக்குவிப்பதன் மூலம், பெற்றோராக அவர்களைச் சுற்றி ஆதரவான உறவுகளை உருவாக்குவது உட்பட நினைவாற்றலைப் பயிற்சி செய்யும் விளையாட்டுகளையும்; நாம் விளையாடலாம்;.

 

மறுவடிவமைப்பது எவ்வாறு என இ.அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்

மறுவடிவமைப்பு என்பது குறைவான மன அழுத்தத்தை உருவாக்கும் வகையில் விஷயங்களைப் பார்ப்பது, அதிக கட்டுப்பாட்டையும் அமைதியையும் வழங்குகிறது. வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகள், ஏமாற்றங்கள் போன்ற கடினமான சூழ்நிலைகளைச் சமாளிக்க இது குழந்தைகளுக்கு உதவுகிறது. உதாரணமாக, வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் எளிய பிரச்சனைகளை அவர்கள் கவலைப்படுவதையோ அல்லது பயப்படுவதையோ விட்டு அதனை வாழக்கை பற்றி கற்றுக்கொள்ளக்கூடிய வலுவாக வாய்ப்புகளாக ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு நீங்கள் கற்பிக்கலாம்.

 

உங்கள் பிள்ளைகளுக்கு இருக்கும் அச்சங்களை எதிர்கொள்ள அவர்களுக்கு உதவுங்கள்

குழந்தைகள் வாழ்க்கையில் பயப்படும் சில விஷயங்களைத் தவிர்க்காமல் எதிர்கொள்ள உதவுங்கள். இருளைப் பற்றிய பயம், பூச்சிக பற்றிய பயம் அல்லது தோல்வி பற்றிய பயம் கூட உங்கள் குழந்தையை அச்சங்களை எதிர்கொள்பவராக மாற்றுவதற்கான வாய்ப்பினை உங்களுக்கு வழங்;கலாம்! ஆனால் அவர்கள் உங்கள் அன்பு மற்றும் ஆதரவால் பாதுகாக்கப்பட்டு சூழப்பட்டுள்ளனர் என்பதை அவர்கள் அறிவது இன்றியமையாதது.

 

வளர்ச்சி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்

உங்கள் பிள்ளை வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகளை சந்திக்கும் போது, ​​அடுத்த முறை மீண்டும் ஏற்படும் போது அவற்றை இன்னும் சிறப்பாக எதிர்கொள்வதற்கு எப்போதும் ஒரு வாய்ப்பு உள்ளது என்று சொல்லுங்கள். வாழ்க்கையின் சூழ்நிலைகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதை பெற்றோர்களும் கற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் குழந்தை இச் சிந்தனை முறையைப் பயிற்சி செய்யத் தொடங்கும் போது, ​​அவர்கள் வாழ்க்கையில் நம்பகரமற்ற சூழ்நிலைகளிலும் அசைக்க முடியாத நம்பிக்கைகள் நிறைந்த வாழ்க்கையை உருவாக்குகிறார்கள்.

 

நேர்மறை சுயமரியாதை கொண்ட குழந்தைகள் நம்பிக்கையுடனும் திறமையுடனும் உணர்கிறார்கள். அவர்கள் தங்களை மற்றும் அவர்களின் திறன்களை மதிக்கிறார்கள். அவர்கள் தாங்கள் செய்வதில் பெருமிதம் கொள்கிறார்கள் மற்றும் சிறந்தவற்றிற்காக பாடுபடுகிறார்கள். மீண்டெழும்தன்மை வளரும்போது, ​​குழந்தைகள் ஜெயிப்பவர்களாக மாறுகிறார்கள்; அவர்கள் வெற்றியை வரவேற்பது மட்டுமின்றி, தோல்வியை வலு பெறவும் வளரவும் பயன்படுத்துகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஆதரவாகவும் யதார்த்தமாகவும் இருக்கும் பெற்றோர்கள் இந்த அழகான பயணத்தில் தங்கள் குழந்தைகளை வெகுதூரம் அழைத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்!

Recommended Articles