Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

நீங்கள் ஆர்வமுள்ளஇ சுறுசுறுப்பான ஒரு வயது முதல் நான்கு வயதுக்குட்பட்ட சிறு பையன் அல்லது ஒரு பெண் பிள்ளையினது பெற்றௌராக இருந்தால் இ கோபமடைதல் உங்களுக்கு விசித்திரமான அனுபவமாக இருக்காது. பெரும்பாலான குழந்தைகள் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் இந்த சு+ழ்நிலையை சந்திக்க நேரிடலாம்இ குறிப்பாக் விரக்தியடைந்து அல்லது தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாதபோது என பல்வேறு காரணங்களால் இது அமையூம்.

உண்மையில் கோபத்தின் வெளிப்பாடுகள் என்றால் என்ன?


உணர்ச்சி வெடிப்புகள் என்று எளிமையாக விளக்கலாம். குழந்தைகள் அழுவதுஇ கத்துவதுஇ மிதிப்பதுஇ தரையில் உருளுவது அல்லது தரையில் எறிவது போன்ற ஆக்ரோஷமான நடத்தைகளாக 


தங்கள் கட்டுப்பாடற்ற உணர்ச்சிகளை வெளியிடுகின்றனர்.  


குழந்தையின் வளர்ச்சியின் செயல்பாட்டில் கோபம் ஒரு சாதாரண பகுதியாக இருந்தாலும்இ சில நேரங்களில் அது பெற்றௌருக்கும் அவர்களைச் சுற்றியூள்ளவர்களுக்கும் மிகவூம் வருத்தமாக இருக்கும். உங்கள் பிள்ளை வழக்கத்தை விட அடிக்கடி கோபத்தை வெளிப்படுத்தினால்இ அதற்கான தூண்டுதல்கள் என்ன என்பதையூம்இ பொருத்தமான நுட்பங்களைப் பயன்படுத்தி அவற்றை எவ்வாறு நிர்வகிப்பது என்பதையூம் நீங்கள் அறிந்து கொள்வது முக்கியம்.

 

தூண்டுதல்களைப் பொறுத்தவரைஇ நாம் மனதில் கொள்ள வேண்டிய ஒரு விடயம் என்னவென்றால்இ எல்லா குழந்தைகளும் ஒரே காரணத்திற்காக விரக்தியடைவதில்லை. அதே நேரத்தில்இ சில குழந்தைகள் யோசனைமிக்க மனநிலைஇ அதிவேகமாக செயற்படுவது அல்லது புதிய சு+ழ்நிலைகளுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தன்மை குறைவாக இருப்பது போன்ற காரணங்களால் மற்றவர்களை விட கோபத்திற்கு ஆளாக நேரிடலாம். சில குழந்தைகள் தங்கள் சொந்த வழியில் அல்லது தங்கள் விரக்திகளை வெளியிடுவதற்கான ஒரு வழியாக கோபத்தை பயன்படுத்துவார்கள். இவை பொதுவான காரணங்களாக இருந்தாலும்இ குழந்தைகள் சோர்வாகவோ அல்லது பசியாகவோ இருக்கும்போது கூட இதுபோன்ற உணர்வூகளால் எளிதில் விரக்தியடைந்து கோபத்தை வீசுகிறார்கள்.


கோபங்கள் வேண்டுமென்றே வெளிப்படுத்தப்படுகின்றனவா?


பதில் ‘இல்லை’. இளம் குழந்தைகளுக்குஇ இது அவர்களின் தீவிர விரக்தியை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும். அவர்கள் வளர வளர இது ஒரு பழக்கமாக மாறும். பெற்றௌர்கள் தகுந்த நுட்பங்களைக் கையாள்வதன் மூலம் கோபத்தை எதிர்கொண்டால் இதைத் தடுக்கலாம். எவ்வாறாயினும்இ ஒரு வொரு குழந்தையின் கோபமான நடத்தைகள் அவரது வாழ்க்கையில் நடைபெறும் அறிவூசார் மற்றும் உணர்ச்சி செயல்முறைகளைப் பொறுத்து அமையூம்.
கோபத்தின் வெளிப்பாடுகளை  சிறந்த முறையில் சமாளிப்பதற்கு குறிப்புகள்...
நம் குழந்தை கோபப்படும்போதுஇ நாம் நினைவில் கொள்ள வேண்டிய முதல் விடயம் என்னவென்றால்எல்லா குழந்தைகளிலும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சீர்குலைக்கும் ஒழங்கற்ற நடத்தைகளை வெளிப்படுத்துகிறார்கள்இ அது புதியது அல்ல. இது உங்களை சங்கடமான உணர்வில் இருந்து விலக்கி வைக்க உதவிடும்.

 

இக்கடினமான நிலையில் உங்கள் குழந்தையை சமாளிக்கஇ நீங்கள் அமைதியாக இருப்பது முக்கியம். அவர்களது கோபத்திற்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறௌம் என்பது மிகவூம் முக்கியமானதுஇ எனவே நாம் ஆக்ரோஷமாக செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில்இ அது குழந்தையின் மனநிலையை மோசமாக்கும்இ மேலும் அவர் எதிர்வினை செயல்களை செய்யத் தொடங்குவர்.
யாருக்கும் எந்த ஆபத்தையூம் உருவாக்கவில்லை என்றால்இ குழந்தையின் விரக்தி தானாகவே குறைவதைப் பார்க்கும் வரைஇ; சில நேரங்களில் என்ன நடக்கிறது என்பதை நாம் புறக்கணிக்க வேண்டியிருக்கும்.

 

ஏனைய பெரியவர்கள் தலையிட முயற்சித்தால்இ நிலைமை இன்னும் மோசமாகலாம் என்பதால்இ தாயாகவோ அல்லது பராமரிப்பாளராகவோ அதை நீங்களே கையாள முயற்சி செய்யூங்கள்இ குழந்தையை சு+ழ்நிலையிலிருந்து வெளியேற்றுங்கள்.
குழந்தை உங்களின் பேச்சைக் கேட்கும் நிலையில் இருப்பார்களாயின் இ அவர்களுடன் நட்பாகப் பேச முயற்சியூங்கள்இ சகல நேரங்களிலும் உங்கள் உணர்ச்சி வெளிப்பாடுகளைக் கட்டுப்படுத்துங்கள்.

 

உங்கள் குழந்தை முற்றிலும் அமைதியாக இருக்கும்போதுஇ அதைப் பற்றி குழந்தையூடன்  நட்பாக பேசுங்கள் மற்றும் கோபத்தின் போது அவர்கள் எவ்வளவூ அசௌகரியமாக உணர்ந்தார்கள்; என்பதை விளக்குங்கள்இ மேலும் எந்தவொரு பிரச்சினையையூம் தீர்க்க அதை விட சிறந்த வழி உள்ளது என்பதையூம் புரிய வையூங்கள்.
.


தளர்வூ நுட்பங்களைப் பயிற்சி செய்ய உதவூங்கள்.


மேலே உள்ள உதவிக்குறிப்புகளைத் தவிரஇ கோபத்தின் வெளிப்பாடுகள் அடிக்கடி நிகழாமல் கட்டுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழிஇ அவற்றை முன்கூட்டியே நிகழாமல் தடுப்பதாகும். உங்கள் பிள்ளைக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய சு+ழ்நிலைகள் மற்றும் காரணிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். இச் சு+ழ்நிலைகளும் காரணிகளும் ஒரு பிள்ளைக்கும் மற்றொரு பிள்ளைக்கும் வேறுபடலாம்.

உங்கள் பிள்ளை வளர்ந்துஇ அவனது சுய-கட்டுப்பாட்டுத் திறன்களை மேம்படுத்தும்போதுஇ  கோபத்தின் வெளிப்பாடுகள் குறைவாகவே இருக்கும். இந்த நடத்தை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்ந்தால்இ கோபத்தின் வலிமை மோசமாகி வருவதை நீங்கள் கண்டால்இ நிபுணர்களின் வழிகாட்டலைப் பெறுவது நல்லது.
எங்களின் சிறு பிள்ளைகள்; பெரிய உணர்ச்சிகளால் மூழ்கடிக்கப்படும்போதுஇ அவர்களின் குழப்பத்தில் நாமும் இணையாமல்இ நமது அமைதியைப் பகிர்ந்துகொள்வதே நமது பணியாகும்.


உதவிக்குறிப்புகள்: கோபத்தின் வெளிப்பாடுகளை நிர்வகித்தல்

1. அமைதியாக இருங்கள்
2. அவ்வாறு செய்வது பாதுகாப்பானது என்றால் உங்கள் குழந்தை அமைதியாவதற்கு அவகாசம் வழங்குங்கள்.
3. மற்றவர்களின் தலையீட்டைத் தடுக்கவூம்
4. குழந்தையை சு+ழ்நிலையிலிருந்து அமைதியான இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்
5. விஷயங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியவூடன் அதைப் பற்றிப் பேசுங்கள்

Recommended Articles