Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

ஓர் குடும்பத்தின் பொதுவான நோக்கம் குடும்பத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்பதை உறுதி செய்வதே. ஆனாலும் நினைப்பது போல அது இலகுவான காரியம் அல்ல அனைவரையும் மகிழ்ச்சி;படுத்துவது என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கும். எதுவாயினும்  கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மகிழ்ச்சியான குடும்பங்களின் செய்கைகளை பார்வையிட்டு ஓர் குடும்பமாக மகிழ்;சசிகரமான பயணத்திற்கு இவை அத்தியாவசியமானது என நான் நம்புகிறேன்.

வார்த்தைகளை கவனமாக பிரயோகித்தல்

 

குடும்பத்திற்குள் மகிழ்ச்சியினை உணர வைப்பதற்கு முக்கியமான ஒருவரும் உணர்வு ரீதியாக காயப்படவில்லை அனைவரும் நிம்மதியாக உணர்கின்றனர் என்ற ஓர் சூழ்நிலையை குடும்பத்திற்குள் உருவாக்குவது அவசியம்.வார்த்தைகளானது அன்பு பாசம் மரியாதை மற்றும் இரக்கம் போன்ற உணர்வுகளை  வெளிப்படுத்தும். அதற்கு வாழ்வினை மாற்றும் சக்தி உள்ளது.

 

 

ஒவ்வொருவரும் பங்குக்கொள்ள வேண்டும்

 

பாராம்பரியமானது என்ற கருத்தினை னொண்டிருந்தாலும் மகிழ்ச்சிகரமான குடும்பங்களில் ஓர் ஒழுங்குமுறை உண்டு. இதன் மூலம் பொருள்படுவது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நன்றாக தெரியும் தங்களின் இடம் என்ன என்பதும் அதில் அவர்கள் மிகவும் சௌகரியமாக உணர்வதும் ஆகும்.குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக பெற்றோர்கள் சில தியாகங்களை போது அன்பாக நடந்துக்கொள்வது போலவே தேவையான போது கடுமையான அதிகாரமும் அவசியமாகும்.

 

 

கேளிக்கைகள் மற்றும் சாகசங்களில் நேரத்தினை முதலீடு வெய்தல்.

விசேட விடுமுறை நாட்களில் மட்டும் மகிழ்ச்சி தரும் வேடிக்கை மற்றும் சாகசங்கள் இடம் பெறக் கூடாது. பெற்றோராக உங்களின் பிள்ளைகளுடன் சிரித்து மகிழ்வதற்காக கட்டாயமாக நேரத்தினை ஒதுக்குவதோடு ஆச்சரியம் தரும் வேடிக்கை விநோத விளையாட்டுக்களிலும் ஈடுபடுங்கள்.இவை அனைத்தும் உங்களின் உடல் உள நலத்தினை மட்டுமல்லாது குடும்பமாக ஒவ்வொருவருக்கிடையிலும் சிறந்த தொடர்புகளை பேண உந்துசக்தியாகின்றது.

 

சரி செய்து கொள்வதற்கான இடைவெளி

குறிப்பிட்ட சில விடயங்களில் மகிழ்ச்சிகரமான குடும்பம் ஆனது நெகிழ்வுத்தன்மையினை அனுமதிக்கிறது. இது விடயங்களை வெறு கோணத்தில் பார்த்தல் மற்றும் அனைவருக்கும் சிறந்ததாக அமையும் விதத்தில் விடயங்களை செய்யும் நோக்கில் சில நேரங்களில் கட்டுப்பாடுகள் தகர்கப்பட அவசியமாகின்றது.

 

சுயநலமற்றர்களாக இருத்தல்:

 

மகிழ்ச்சியான குடும்பங்களில் ஒருவருக்கொருவர் மற்றவர்கள் மீது தீவிர ஆர்வமாக இருக்கும் நோக்கத்தினை தெரிவு செய்வதன் மூலம் சகலருக்கும் பரஸ்பரமான ஆதரவினை வழங்குவதில் நம்பிக்கை கொண்டுள்ளனர். இது கலந்துரையாடல்கள் கேள்விகளை கேட்பதன் மூலம் உணவு வேளையின் போது நாளாந்த செயற்பாடுகளை கேட்டறிதல் மூலம் சில குடும்ப வேலைகளில் உதவிகளை வழங்குலதன் மூலமாகவோ இருக்கலாம்.

 

 

தவறுகள் அனுமதிக்கப்படுதல்

அவர்கள் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி குழந்தைகள் மீது எதிர்பார்ப்புகளை வைத்திருப்பது நல்லது, ஆனால் அவர்கள் கற்றுக்கொள்ள சிறந்த வாய்ப்புகள் என்பதால் தவறுகள் அனுமதிக்கப்படுகின்றன என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதும் முக்கியம். எனவே அவர்கள் நீங்கள் எதிர்பார்க்கும் தரத்தை பூர்த்தி செய்யாதபோது அவர்கள் வெட்கப்படவோ அல்லது அச்சுறுத்தலையோ உணரமாட்டார்கள். தவறுகளை மன்னிப்பதும் ஏற்றுக்கொள்வதும் மகிழ்ச்சியான இல்லத்தில் நடைமுறையாக இருத்தல் வேண்டும்.

 

இப்போதே பாராட்டுங்கள்

 

குழந்தைகள் இப்போது இருப்பதைப் போல் மீண்டும் ஒருபோதும் இளமையாக இருக்க மாட்டார்கள். அனைத்துவிதமான முக்கியமான பணிகள் மற்றும் கடின உழைப்புக்கு மத்தியிலும், எந்தவொரு பெற்றோரும் இந்த விநோதமான நேரத்தை தவறவிடக்கூடாது. எனவே, ஒரு நாளில் நீங்கள் ஒரு முறையாவது ஏனைய சகல வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உங்கள் குழந்தை நடனமாடுவதைப் பார்க்க, விளையாட்டு ஒன்றினை விளையாட அல்லது அவர்களுடன் எளிமையான உரையாடலைப் மேற்கொள்ள நேரத்தினை செலவழியுங்கள். உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியை உருவாக்கும் தருணங்கள் இவை.

நினைவில் கொள்ளுங்கள்! சகல நாட்களும் மகிழ்ச்சியான குடும்ப நாட்கள் அல்ல, ஆனால் மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்க ஒவ்வொரு நாளும் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்யலாம்.

 

 

 

உவிக்குறிப்புகள்: மகிழ்ச்சிகரமான குடும்பத்தின் செய்கைகள்

  • வார்த்தைகளை கவனமாக பாவித்தல்
  • சகலரும் அவர்களுக்கும் பங்கு உண்டு என்பதை அறிந்துக்கொள்ளல்.
  • கேளிக்கை மற்றும் சாகச செயல்களில் நேரத்தினை முதலிடல்
  • தேவையான போது நெகிழ்வுத்தன்மையுடன் செயற்படல்.
  • சுயநலமற்று இருத்தல்
  • உங்கள் பிள்ளைகள் அறிந்துக் கொள்ளட்டும் தவறுகளும் அனுமதிக்கப்படும் என.
  • உங்கள் பிள்ளைகளை இப்போதே பாராட்டுங்கள்.

Recommended Articles