Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

பணிகளை மேற்கொள்ள தொடர்பாடல் அவசியம் உங்கள் குழந்தை செவிமடுக்கவும் உதவுகிறது

Dinusha Manjarie Wickremesekera

குறிப்பு: உங்களின் அழகிய குழந்தையை அறிந்துக்கொள்வதற்காக தொடர்பாடல் மற்றும் பகிர்தல் அனுபவங்கள் தேவை என்பதை அறிவோம். இருவரும் இணைந்து செயற்படும் போது பணிகளை செய்து முடிக்க உதவியாக இருப்பதுடன் நடைமுறை வழக்கத்தினையும் உருவாக்குகிறது. தொடர்பாடல் ஆனது நடத்தையினை வடிவமைக்க உதவுகிறது.

நாம் ஒரு தகவலை பரிமாறவோ அல்லது அறிவிக்கவோ அல்லது இரண்டு அல்லது மூன்று நபர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவோ தொடர்பாடலை மேற்கொள்கிறோம். உறவுமுறைகளின் தரத்தினை மேற்படுத்திக்கொள்ளவும் சமூகத்துடனான ஒன்றிணைவுக்கும் தொடர்பாடல் அடிப்படையாக அமைகிறது.

தகவல் தொடர்புக்கு சொற்களஞ்சியம் தேவை என்பதுடன் மழலைகள் சத்தம் கேட்கும் திசை நோக்கி தங்களது தலையினை திருப்பி அவர்களது பெயரினை அழைக்கும் போது அதற்கு பதிலளிப்பதுடன் சொற்களையும் நன்றாக கூர்ந்து கவனிப்பர். இரண்டு வயதாகும் போது அவர்கள் சொற்களை உள்வாங்கிக் கொள்ள முடிவதுடன் சொற்களை எவ்வாறு எங்கு பயன்படுத்தலாம் என்பதனையும் விரைவாக புரிந்துக்கொள்வார்கள்.

 

குழந்தைகள் இவ்வயதில் கேட்பதன் மூலம் கற்றுக்கொள்கின்றனர். உங்கள் குழந்தைகள் உடன் மீண்டும் மீண்டும் கதைப்பதும் சிறு வயதிலிருந்தே சிறந்த தொடர்பாடல் செயன்முறை ஆரம்பிப்பதற்கு உதவியாக இருக்கின்றது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்ன நடக்கிறது என்பதை பற்றி அவர்களுடன்  சிறு வயதிலிலேயே கதைப்பது சிறப்பாகும். குறிப்பாக நீங்கள் ஒரு விடயத்தை செய்யும் போது அவர்கள் அதை என்னவென்று சொல்லாவிட்டாலும் அதை பற்றி அவர்கள் தங்களது மனதில் பதிவு செய்து கொள்கிறார்கள்.

 

குழந்தைகள் எப்போதும் nhசற்களை உச்சரிக்க தொடங்க முன்பே கதைக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் அவர்களுக்கு தேவையானதை சைகை மூலமாக காட்டுகறார்கள். எங்களின் தொடர்பாடலில் 60மூ சொற்கள் அல்லாதவை ஆகவே அவர்களின் உடல் அசைவு மற்றும் முகபாவனையை நன்றாக கவனியுங்கள்.

குழந்தைகள் மிகவும் ஆர்வமுள்ள பார்வையாளர்கள் . இதன் கருத்து நாம் எமது குழந்தைகளுடன் வாய்மொழி மூலமாக தொடர்பு கொள்கிறோம். குழந்தைகள் அதை பின்பற்றுகிறார்கள் அத்தோடு எங்களின் வாய்மொழியற்ற வழிகாட்டற் குறிப்புகளையும் கவனித்து அல்லது அதனை உள்வாங்கி பின்பற்றுகிறார்கள். உதாரணமாக நீங்கள் உங்கள் பிள்ளை உடன் கதைத்து கொண்டிருக்கலாம் ஆனாலும் நீங்கள் கணிணியையோ அல்லது போன் பாரத்துக்கொண்டிருக்கலாம். ஒரு குழந்தை இப்போது வற்புறுத்தவோ கோபமாகவோ இருக்கக் கூடும் ஏனென்றால் உங்களின் கவனம் அவர்கள் மீது இருக்கவில்லை என்பதை அவர்கள் உணர்கிறார்கள்.

ஆகவே ஒரு குழந்தையுடன் கதைக்கும் போது உங்கள் கவனம் மற்றும் நீங்கள் அவர்களுடன் இருப்பது முக்கியமாகின்றது. பல்வேறு வழிமுறைகளில் இதை உங்களால் உணர்த்த முடியும். இணைந்து கதைக்கும் போது முதலில் கவனம் முழுவதும் முழுமையாக குழந்தை மீது இருத்தல் வேண்டும். நேரத்தை ஒதுக்குங்கள் உங்களால் அத்தருணத்தில் முடியவில்லையாயின் அதனை தெளிவுப்படுத்தி பின்னர் ஒரு நேரத்தினை ஒதுக்கிடுங்கள். இரண்டாவதாக குழந்தையுடன் கண் மட்டத்தில் இருந்து கதைப்பது சிறந்தது. ஆகவே இருவரும் அமர்ந்து பேசலாம் அல்லது நீங்கள் நின்றுக்கொண்டிருந்தால் குழந்தையின் நிலைக்கு கீழிறங்கி வாருங்கள்.

நினைவில் கொள்ள வேணடிய மற்றுமொரு முக்கியமான விடயம் குழந்தைகள் நிறைய கதைக்கும் போது அதிகளவாக வெளிப்படுத்துவது அவர்களின் உணர்வுகளையே. அவர்கள் அழுகிறார்கள் என்றால் பசி கோபம் அல்லது கவலையாகவோ இருக்கலாம். இவ் அழுகைக்கு காரணம் வெறுப்பாக கூட இருக்கக் கூடும்.இச் சிறு உரையாடல் ஒரு பொது இடத்தில் நடக்கிறது என்றால் அல்லது சிறந்த ஒரு நேரமாக அமையவில்லையாயினும் இதை நினைவில் கொள்வதன் மூலம் குறித்த தேவையை நிவர்த்தி செய்ய அல்லது அதற்கு பதிலளிக்காமல் இருக்க மற்றும் நடத்தையினை தொடர்ந்து செய்யாமல் இருக்க உதவுகிறது.

உங்கள் பிள்ளைகளுக்கு வயது அதிகரிக்கும் போது உங்களுடைய தொடர்பாடல் பாணியும் மாற்றமடையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 12 மாதங்கள் வரை உங்கள் குழந்தையின் தேவைகளுக்கு விரைவான பதில்களை வழங்குவீர்கள் மற்றும் தொடர்பு கொள்வதற்காக அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அர்த்தம் கொடுக்க முயற்சிப்பீர்கள். உதாரணமாக உணவு நேரம் நெருங்குகி;றது அந்நேரத்தில் ஒரு குழந்தை அழுமாயின் நீங்கள் கூறுவது;ண்டுசாப்பாடு டைம் வந்துட்டு தானே பிள்ளைக்கு பசி அதான்  அழுகிறீர்கள் என” .அவர்களின் உணர்ச்சிகளை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பதை நீங்கள் நன்கு கவனித்திருப்பீர்கள்.

1-3 வயதிற்கிடையில்  குழந்தைகள் சொற்களை நன்றாக புரிந்துக்கொண்டு கூற ஆரம்பிப்பார்கள். ஆகவே ஆரம்பத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருப்பீர்கள். அவர்களிடம் சொற்கள் கைவசம் இருக்கும் வரை நிறைய வசனங்களையும் பேச ஆரம்பிப்பதுடன் அவர்களுடன் கேள்வி பதில்களையும் கேட்க ஆரம்பிப்பீர்கள். அவர்களின் உணர்ச்சி வெளிப்பாடு மற்றும் மதிப்பீடு செய்ய என்ற எண்ணத்தில் அதனை நீங்கள் தொடர விரும்புவீர்கள். இத்தருணத்திலேயே அவர்கள் தங்களை வலுவாக வெளிப்படுத்திக் கொள்வார்கள். ஆகவே நீங்கள் என்ன நடக்கப் போகிறது என்பதை பற்றியும் எப்போது தயார்ப்படுத்த வேண்டும் என்பது பற்றியும் அவர்களுடன் கதைக்கலாம்.

ஆனாலும் எவ்வாறு பணிகளை செய்யப் போகிறோம். இதுவரையில் எவ்வாறு எங்களது உறவுமுறையினை தொடர்பாடல் மூலம் மேம்படுத்தலாம் எனப் பார்த்தோம். உறவுமுறையானது சரியான முறையில் நிலைநிறுத்தப்பட்டதும் எல்லைகளை விதிகளை மற்றும் பணிகளை மேற்கொள்வது எளிதான விடயமாக மாறிவிடும். குழந்தைகளின் ஆம் களுக்கு நீங்கள் செவிமடுக்கலாம். ஆனாலும் உங்களின் சொந்த எதிர்ப்பார்ப்பில் தெளிவாக இருத்தலும்; அவசியமாகிறது.

எனவே குழந்தைகள் ஏதாவது செய்ய வேண்டும் என நீங்கள் நினைத்தால் அதை செய்ய வேண்டும்.

1.            அவர்கள் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீரகளோ அதற்கு முன் உங்களிடம் அவர்களின் கவனம் இருக்கின்றது என உறுதி செய்யுங்கள்.

2.            அவர்கள் புரிந்துக்கொள்ளும் விதத்திலும் எவ்வாறு செய்ய வேண்டும் என அவர்களுக்கு தெரியும் விதத்திலும் உங்களது அறிவுறுத்தல்களை எளிமையாகவும் தெளிவாகவும் கூறுங்கள்.

 

3.            பணிகளை மேற்கொள்ள அவர்களுடன் நீங்கள் மிகவும் நெருக்கமாக அருகிலேயே இருப்பது மிகவும் உதவியாக இருக்கும்.

4.            அறிவுறுத்தல்களை வழங்கும் போது அவர்கள் அதை புரிந்துக்கொள்வதற்கான கால அவகாசம் உண்டு என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

5.அவர்கள் பணிகளை நிறைவேற்றிய பின் அவர்களை புகழந்து பாராட்ட மறவாதீர்கள்.

Recommended Articles