Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

குழந்தைகள் மீதான அக்கறையை செலுத்தும் வேளையிலேயே குழந்தைகளின் விருத்தியினை எவ்வாறு உறுதி செய்வது?

Nimali Buthpitiya

குழந்தைகள் மீது அக்கறை (பராமரிப்பு) காட்டுவது இயற்கை. அக்கறை என்று குறிப்பிடும் போது இது பல்வேறு நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக இருக்கும் . மிகவும் எளிமையான செயல்களான உணவு ஊட்டுதல் தொடக்கம் உடை அணிவித்தல் , அவர்களின் நடத்தைகளை புரிந்துக்கொள்ளல் ,பதிலளித்தல் வரை குறிப்பிடலாம். பெற்றோர்கள் மற்றும் அவர்களை பராமரிப்போர்களாலும் குழந்கைகளுக்கான பராமரிப்பு  வழங்கப்படுகின்றதுஅவர்கள் இருவராலும் சகல தருணங்களிலும் குழந்தை ஆரோக்கியமாக பாதுகாப்பாக மற்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே சிறந்த பராமரிப்பினை காட்டுகின்றனர்.

 

குழந்தை வளர்ச்சிக்கு தேவையான சிறந்த பொருத்தமான பராமரிப்பினை வழங்குறோம் என்பதை உறுதிப்படுத்துவது ஓர் முழுமையான குழந்தையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாகும்.வளர்ச்சி மற்றும் விருத்தி என்பதினால் கருதப்படுவத யாது? ஊட்டச்சத்து மற்றும் உடல் பராமரிப்பு நடவடிக்கைகள் அல்லது செயல்பாடுகள் மூலம் ஓர் குழந்தை அடையக் கூடிய உடல் ரீதியான விடயங்களை கருத்திற் கொள்வது வளர்ச்சி ஆகும். குழந்தைகளின் உணர்ச்சிகள் ,சமூக,  அறிவாற்றல், மொழி மற்றும் மேற்கூறிய உடல் அம்சங்கள் உள்ளலடங்கலாக ஆன்மீக அம்சங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஓர் பரந்த கருத்து கொண்ட விடயம் விருத்தி எனக் கருதப்படுகின்றது.

 

ஆகவே எஙகளின் பராமரிப்பு செயற்பாடுகள் பொருத்தமானவைதான் என்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும். அதாவது ஒரு குழந்தையின் ஒவ்வொரு பகுதியையும் மேம்படுத்தும் பராமரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அக்குழந்தை  முழுமையாய் செயற்பட ஆரம்பிக்கும். வேறு விதத்தில் கூறுவதாயின் எங்களின் பராமரிப்பு செயற்பாடுகள் மூலம் ஒரு குழந்தையின் எல்லா பகுதிகளுக்குமிடையில் ஆரோக்கியமான சமநிலையை பேண நாம் உதவுவதுடன் அவர்களின் ஆரம்பகால குழந்தைப்பருவ வளர்ச்சி நிலைகளில் உயர செல்வதற்கு உறுதுணையாகவும் இருக்கின்றோம்.

வளர்ச்சிக்கேற்ற பொருத்தமான கவனிப்பினை மேற்கொள்ளல் உங்கள் குழந்தையின் திறன்களையும் ஆற்றல்களையும் புரிந்துக்கொள்ளல் அவர்களின் வயதிற்கேற்ற செயற்பாடுகளை செய்யக் கொடுப்பது யதார்த்தமான எதிர்பார்ப்புகளை கொண்டிருத்தல் அத்தோடு விளையாட்டு மற்றும் கற்றல் நடடிவடிக்கைகளுக்கு வயதிற்கு பொருத்தமான பொருட்களை வழங்குதல் போன்றனவாகும். எதுவாயினும் ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள் . ஆகவே முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்பாளர்கள் இருவரும் குழந்தையின் நடத்தையினை புரிந்துக்கொள்வதிலும் அவர்களுக்கான மேம்பாட்டிற்கான தேவைகளை இனங்காண்பதிலும் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும். இது வெவ்வேறு குழந்தை பராமரிப்பு நடத்தைகள் மூலம் இனங்காணப்பட்டு பூர்த்தி செய்யப்படலாம்.

 

உங்கள் குழந்தையின் மேம்படுத்தல் செயற்பாட்டில் நீங்கள் சரியான பராமரிப்பினையே வழங்குகிறீர்கள் என்பதனை உறுதி செய்துக்கொள்ள உங்களுக்கான சில குறிப்புகள் இதோ!

 

அவர்களின் நடத்தை குறித்து உங்களின் விதிமுறைகள் எளிமையானதாகவும் இலகுவானதாகவும் இருக்கும் பட்சத்தில் அவர்கள் அதை பின்பற்ற விரும்புவார்கள்.

பாதுகாப்பான மற்றும் குழந்தைக்கு நட்புறவான சூழலை உருவாக்கிடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகள் எந்தவித இடையூறுகளும் இல்லாமல் அவர்களின் செயற்பாடுகளில் சுதந்திரமாக ஈடுபடுவார்கள்.

உங்கள் பிள்ளைகளுக்கு சேட்டில் பொத்தான்களை பூட்டுதல் ,அவர்களாகவே சாப்பிடுதல் ,அவர்களின் விளையாட்டுப் பொருட்களை கழுவுதல் போன்ற சில இலகுவான பணிகளை செய்ய பயிற்சி அளியுங்கள். வ்வாறு செய்வதன் ஊடாக அவர்கள் குறிப்பிட்டளவு வரை சுதந்திரமாக உணர்வதுடன் அவர்களின் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்யும்.

அவர்கள் குறிப்பிட்ட  தெளிவான மற்றும் வயதிற்கேற்ற தொடர்பாடலை அவர்களுடன் கையாளுங்கள். இது அவர்களின் மொழி வளம் மற்றும் சமூகத் திறனை ஊக்குவிக்கும்.

எளிமையான சில சிக்கல்களை தீர்பப்பதற்கு அவர்களுக்கு பயிற்சி அளித்து தீர்வுகளை கண்டறிய ஊக்குவியுங்கள். உதாரணமாக அவர்களின் அறிவாற்றலை விருத்தி செய்யக் கூடிய ஏதேனும் ஒன்றை செய்வதற்கான புதிய வழியையோ அல்லது pரணணடந களுக்கான தீர்வினை காணல் போன்றன . சுய கற்றலுக்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அவ்வாய்ப்பினை தவறாமல் அவர்களுக்கு வழங்குங்கள்.

 

குழந்தைகள் அவர்களின் நாளை ஓர் ஓழுங்கின்படி கழிப்பதற்கு உதவிடுங்கள். இவ்வாறு செய்வதன் ஊடாக அவரகளின் ஒழுங்கு உணர்வை விருத்தி செய்வதுடன் குழந்தைகள் சிறிய விடயங்களில் மிக நீணட் நேரத்தை செலவிடுவதை விட்டு நாளில் வெவ்வேறு விதமான பணிகளை செய்து நாளினை மகிழ்ச்சியாக அனுபவிப்பர்.

உடல்சார்ந்த விளையாட்டுக்கள் அமைதியான விளையாட்டு இசை மற்றும் அசைவுகள்சார் செயற்பாடுகள் போன்ற வெவ்வேறு விதமான கற்றல் மற்றும் விளையாட்டு அனுபவங்களை அவர்களுக்கு வழங்கிடுங்கள்.

 

பூக்கன்றுகளுக்கு நீர் ஊற்றுதல் சுத்தம் செய்தல் வீட்டில் உள்ள செல்லப் பிராணிகளை பராமரித்தல், சமைத்தல் போன்ற சிறு வீட்டு வேலைகளில் அவர்களின் உதவியை பெற்றுக்கொள்ளல்.

 

அவர்களின் கேள்விகளுக்கு பதில்களை வழங்குங்கள். அவர்கள் வாழும் உலகினைப் பற்றி கற்க தொடங்கும் போது அவர்கள் பலவிதமான கேள்விகளை எழுப்பத் தொடங்குவார்கள் . அவ்வாறான அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது. அது அவர்களின் உலகம் தொடர்பான அறிவினை மேம்படுத்தும்.

 

குறிப்புகள்:

  • உங்கள் குழந்தைக்கு பொருத்தமான பராமரிப்பு நடவடிக்கைகளை வழங்குவதற்காக சில குறிப்புகள்:
  • உங்களின் குழந்தையின் திறன்களையும் ஆற்றல்களையும் நன்கு புரிந்துக்கொள்ளல்.
  • அவர்கள் மீது அவர்களின் வயதிற்கேற்றவாறான விருத்தி மற்றும் நடைமுறைக்கேற்ற எதிர்பார்ப்புக்களை கொண்டிருக்கவும்.
  • சகல நேரங்களிலும் தெளிவான தொடர்பாடலினை பேணவும்.
  • பல்வகையான விளையாட்டுகள் மற்றும் கற்றல் அனுபவங்களை அவர்களுக்கு வழங்கவம்.
  • அவர்களின் ஈடுபாட்டினை பாராட்டுவதுடன் அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.
  • பாதுகாப்பான மற்றும் குழந்தைக்கு நட்பறவான சூழலை உருவாக்கிக் கொடுங்கள்.

Recommended Articles