பொறுப்புள்ள பெற்றோராதல்
Dinusha Manjarie Wickremesekera
நான் உங்களை ஓர் சிந்தனைத்திறன்; நிறை;நத செயன்முறை ஒன்றை முயற்சிக்க உங்களை அழைக்கின்றேன். ஓர் அழைப்பு மணியின் ஒலியையோ மொபைலில் வரும் நொட்டிபிகேஷன் ஒலியையோ பறவைகளின் இன்னிசையையோ அல்லது நீங்கள் தினமும் தவறாமல் கேட்கும் வேறு ஏதேனும் சத்தத்தையோ தேர்வு செய்யுங்கள். ஒவ்வொரு தடவையும் நீங்கள் இவ் ஒலியை கேட்கும் போதும் உங்களை இடைநிறுத்துவதற்கான ஒலியாக மாறட்டும் இடைநிறுத்தும் போது அமைதியாக மீண்டும் உங்களுக்குள் மீண்டும் உள்வாங்குகிறீர்கள்.” எனக் அழகாக கூறுகிறார்
“அழைப்பு மணியின் சத்தம் என்னை என் நிஜ வீட்டிற்கு அழைத்து செல்கிறது”
வருகின்ற இரண்டு மூன்று நாட்களில் இச் செயற்பாட்டினை நீங்கள் சிறிது நேரம் பயிற்சிப் செய்து இப்பயிற்சியில் உங்கள் அனுபவத்தினை வெளிப்படுத்துங்கள். நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்? உங்கள் உணர்வுகளில் ஏதேனும் மாறுதல் தெரிகின்றதா ?என
நாளாந்த சிந்தனைத்திறன் பயிற்சிக்கான இவ் அழைப்பை எற்றுக்கொள்ளுதல் பெற்றோர்கள் ஓர் பரபரப்பான நாளினை புத்துணர்ச்சி ஊட்டிக் கொள்வதற்காக ஒருவர் தனது உண்மையான வீட்டிற்கு அல்லது தனக்குள்ளேயே மீண்டும் செல்வதற்கு இப்பயிற்சி வாய்ப்பினை அளிக்கின்றது. உங்கள் குழந்தை மோசமான நாளினை எதிர்கொள்ளும் போது நீங்கள் அதை சமாளி;க்க வேண்டி ஏற்படும். இத்தருணங்கள் உங்கள் மனது மீண்டும் திரும்புவதற்கான இடத்தை அனுமதிக்கும் . ஆகவே உங்களால் அவர்களின் நடத்தையினை சிறந்த புரிதலுடன் மேற்கொள்ள முடியும். உங்கள் குழந்தைகளிடம் என்ன நடக்கிறது என்பதனை அறந்துக் கொள்ள சிறிது நேரத்தினை ஒதுக்குங்கள். இந்த எளிமையான உணர்வு தினமும் வளர்க்கப்படும் போது உங்களின் சமூகமளித்தலானது உங்களின் தொடர் துணையாக மாறுகின்றது. ஒரு தனிப்பட்டவர் கொண்டிருக்கக் கூடிய மிக முக்கியமான உறவுமுறையானது பெற்றோர் பிள்ளைகள் உறவுமுறையாகும். பிள்ளைகள் அவரகளின் பெற்றோரை பார்த்தே அவர்களின் நடத்தையினை வடிவமைக்கிறார்கள். அவர்கள் அன்பினையும் அங்கீகாரத்தினையும் எதிர்பார்ப்பார்கள். மேலும் உறவுக்குள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள பார்ப்பார்கள். இது குழந்தைக்கான ஓர் பாதுகாப்பான இடமாகும்: பெற்றோருக்கு மகிழ்ச்சியும் சோதனைகளும் நிறைந்த இடமாகும்.
பெற்றோர்கள் தங்களது பெற்றோராக செயற்படும் காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் அதேவேளை பெற்றோர்கள் அவர்கள் விரக்தியாக இருக்கும் பட்சத்தில் எவ்வேளையிலும் தங்களது ஆதரவினை வழங்குவதும் இல்லை. பெற்றோர்கள் வெளியில் வேலை செய்தாலும் வீட்டில் செய்தாலும் நாள் முடிவடைந்தாலும் பெற்றோர்களின் வேலை முடிவடைவதில்லை. சில நேரங்களில் பெற்றோருக்கான கேள்வி அதிகபட்சமாகவும் மன அழுததம் உள்ளதாகவும் காணப்படுகின்றது.
நினைவாற்றல் பயிற்சியானது மன அழுத்தத்தினை கையாள்வது பற்றியதாகும். நினைவாற்றல் ஆனது தற்போது இருக்கும் தருணம் பற்றிய விழிப்புணர்வு என விவரிக்கப்பட்டுள்ளது. எங்களது மூச்சு உணர்வுகள் உடல் எண்ணங்கள் மற்றும் உணர்சிகளின் பற்றிய சிந்தனைத்திறன் இக்கணத்தில் என்ன நிகழ்கிறது என்பது பற்றி அறிய உதவும்.
தற்போதைய கணத்தில் முழுமையாக விழிப்புணர்வுடன் இருத்தல் எனபது “நான் யாருடன் இருக்கின்றேன் “நான் என்ன செய்கிறேன்” “நான் என்ன உணர்கிறேன்” என்பதை ஏற்றுக்கொண்டு நன்றியுணர்வுடன் இருத்தல் ஆகும். ஏற்றுக்கொள்ளல் மற்றும் நன்றியுணர்வு பற்றிய இவ்விழிப்புணர்வு நாம் மன அமைதியுடன் இருப்பதற்கு வழிகோலும். இவ் மன அமைதி ஆனது எங்களின் செயற்பாடுகள் மற்றும் உறவுமுறைகளில் ஆதிக்கம் செலுத்தும்.
சிந்தனைந்திறன் ஆனது எதிர்விளைவுகளிலிருந்து பதில்களுக்கு நகர்வதற்கு உதவுகின்றது. எதிர்விளைவுகளுக்கும் பதில்களுக்கும் இடையிலான வேறுபாடு கடினமான தருணங்களில் மிகவும் முக்கியமானதாக காணப்படுகின்றது. நீங்கள் வெளியே சொப்பிங் செல்லும் போது உங்கள் பிள்ளை தந்திரமாக நடந்துக்கொள்ள முயற்சிக்கலாம். எல்லோரும் உங்களை நோக்குகிறார்கள் உங்களை பற்றி அவர்களின் தீர்ப்பை உங்களால் உணர முடியும். இடைநிறுத்துங்கள்: உங்களால் இத்தருணத்தில் தந்திரத்திற்கு பதில்அளிப்பீர்களா வெளியாட்களின் மறுப்பிற்கு பதில் அளிப்பீர்களா? அல்லது சூழ்நிலைகளின் தேவையை அறிந்து பதில் அளிப்பீர்களா என நீங்கள் முடிவு எடுக்கலாம். பதிலளிப்பானது அக்கறை சிந்தனைத்திறன் மற்றும் சிக்கல் நிலை அகற்றுதல் போன்ற நிலையிலிருந்தும் பதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்ற நிலையிலிருந்தும் பிறக்கின்றது.
சிந்தனைத்திறன் என்பது நேர்மறைச் சிந்தனை என்பதல்ல என வலியுறுத்தப்பட வேண்டும். கோபம் பயம் அல்லது எந்தவொரு எதிர்மறையான உணர்ச்சிகளையும் நிராகரிப்பது அல்ல. கோபம் பயம் மகிழ்ச்சி அல்லது எந்தவொரு உணர்ச்சியாக இருப்பினும் தற்போதுள்ள இத்தருணத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் எனபதிலிருந்தே நேர்மறையான விளைவுகள் வெளிவருகின்றன. எவ்வகையான உணர்ச்சிகளையும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாயிருத்தல் அது உங்களை கட்டுப்படுத்துவதை விட்டு நீங்கள் அதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்.
இது பிணைப்பு சுய -இரக்கம் அன்பு கருணை போன்ற சிந்தனைத்திறனின் இன்னுமொரு முக்கியமான அம்சத்திற்கு கொண்டு செல்கிறது. பெற்றோராதல் எனப்து சவாலான ஒன்றுதான். கேள்விகளை கேட்பது இரண்டாவதாக யூகித்தல் போன்ற விடயங்களினால் உங்களை நீங்களே துன்புறுத்திக்கொள்ள வேண்டாம். நீங்கள் மற்றவர்களுடன் இருப்பதை போலவே உங்களுடனும் அன்பாக இருங்கள். இப்பயிற்சியானது உங்களுக்கு அன்பு மற்றும் ஆக்கப்பபூர்வமான பின்னூட்டங்களை வழங்கும். நீங்கள் இரு நட்சத்திரங்களையும் ஓர் விருப்பத் தெரிவினையும் கொடுங்கள். இரண்டு நட்சத்திரங்கள் என்பது இரு நல்ல விடயங்கள்.( விழிப்புணர்வுடன் பார்க்கும் போது எப்போதுமே இருக்கும்) மற்றையது நீங்கள் விருப்பத் தெரிவாக மாற்றக் கூடிய தற்போதுள்ள ஓர் நல்ல விடயம் .நீங்கள் பிள்ளையுடன் சிறந்த பிணைப்பொன்றினை வளர்த்துக்கொள்ள வேண்டும் .எவ்வாறாயின் எதிர்மறையான செயல்பாடுகளின் விளைவுகளை புரிந்துக்கொள்ள அவர்களுக்கு உதவி செய்யும் அதேவேளை நேர்மறை செயல்பாடுகளை வலுப்படுத்தவும் முடியும். இரண்டு நட்சத்திரங்கள் மற்றும் ஓர் விருப்பத் தெரிவு இதனை செயவதற்கான ஓர் வழியாகும். உங்களுடனும் மற்றவர்களுடனும் சொல்லிலும் செயலிலும் அன்பாக இருங்கள் .
நான் இக்கட்டுரையில் நீங்கள் முயற்சிக்கக் கூடிய இரண்டு விதமான பயிற்சிகளை கொடுத்துள்ளேன். உங்களுக்குள் திரும்பும் ஓர் பயிற்சி மற்றும் மற்றொன்று சிந்தனைத்திறன் உடன் தொடர்பாடல் முறையாகும். இம்முறைகள் உங்கள் பயணத்திற்கு துணை புரியும் என நம்புகிறேன்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles
பெற்றோராதலின் புத்தம் புதிய பார்வை
விவாதத்திற்கு இடமில்லாமல் ஒருவரின் வாழ்நாளில் ஒருவர் அனுபவிக்கக் கூடிய மிகவும் சவாலான ஓர் விடயம் பெற்றோராதல். எவ்வாறாயினும் பொருத்தமான மற்றும் ஆரோக்கியமான பெற்ற...
Read More