பெற்றோராதலின் புத்தம் புதிய பார்வை
Nimali Buthpitiya
விவாதத்திற்கு இடமில்லாமல் ஒருவரின் வாழ்நாளில் ஒருவர் அனுபவிக்கக் கூடிய மிகவும் சவாலான ஓர் விடயம் பெற்றோராதல். எவ்வாறாயினும் பொருத்தமான மற்றும் ஆரோக்கியமான பெற்றோராதல் முறைகளை கையாளும் போது பயனளிக்கும் என்பதோடு மகிழ்ச்சியான அனுபவத்தையும் தரும் .
பெற்றோரை சரி அல்லது தவறு என வகைப்படுத்த முடியுமா? சரியான அணுகு முறை என்பது ஒரு பெற்றோரின் நடைமுறைகள் சரியா தவறா என்பதை அடையாளம் காண்பதல்ல மாறாக ஓர் குழந்தையின் செயற்பாடுகளின் வெளிப்பாடுகளிலேயே அது தங்கியுள்ளது. பெற்றோரின் நடைமுறைகள் பழைமையானதாகவோ அல்லது புதியதாகவோ இருக்கலாம். ஆரோக்கியம் மற்றும் நேர்மறை விளைவுகள்; அன்பு மற்றும் தொடரச்சியான சிறந்த வெளிப்பாடுகளை கொண்டுவருதல் வேண்டும் .இந்த நடைமுறைகள் குடும்பத்தின் கலாச்சாரம் பாரம்பரியங்கள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் தனித்துவமானதாக இருக்கலாம். எது எவ்வாறாயினும் ஆரோக்கியமான பெற்றோர் குழந்தை உறவுமுறையுடன் சகல விதத்திலும் சிறந்த பிள்ளையை உருவாக்குவதே பெற்றோர்களின் முக்கிய குறிக்கோளாகும்.
“பெற்றோர்களே தங்கள்; பிள்ளைகளுக்கு ஆசியர்கள் வழிகாட்டிகள் தலைவர்கள் பாதுகாவலர்கள்”
- Iyanla Vanzant
எவ்வளவு கடினமான விடயம் என்றாலும் பிள்ளைகள் சில வருடங்களுக்கு முன்பு இருந்த அதே மாதிரியாக இருக்கமாட்டார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். முன்பு இல்லாத ஆசைகள் தேவைகள் சூழ்நிலைகள் போன்ற புதிய விடயங்களுடன் எங்களை வெளிப்படுத்துகின்றோம். இவை நம்மை அதநவீன வாழ்க்கை முறைகளை கொண்ட அதி நவீன மனிதர்களாக மாற்றிவிட்டன. இதற்கு குழந்தைகளும் விதிவிலக்கல்ல . பெற்றோருக்கு செவிமடுத்தல் அவர்களுக்கு மதிப்பளித்தல் அவர்களுடன் வெளிப்படையாக பேசுதல் இவ்வாறான நடத்தைகளே பிள்ளைகளிடம் இருக்க வேண்டும் என்று பெற்றோர் ஆசைப்படுகின்றனர். எவ்வாறாயினும் பழைய நாட்களை போல இந்நடத்தைகளை எளிதில் கொண்டு வர முடியாது. நவீன பெற்றோர் சிறந்த மற்றும் ஆரோக்கியமான பிள்ளை –பெற்றோர் உறவுமுறையினை வளர்ப்பது அத்தோடு கடினமான தருணங்களில் இருந்து எவ்வாறு வெளிவருவது போன்றவற்றை நவீன பெற்றோராதல் நடைமுறைகள் கொண்டுள்ளன. ஒவ்வொரு குடும்ப அலகிற்கும் தனித்துவமான நம்பிக்கைகள் பெறுமதிகள் மற்றும் ஆர்வத்தினை பொருத்து நவீன பொற்றோராதல் நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வடிவமைக்கப்படுகின்றன.
இதோ பெற்றோர்கள் பின்பற்றக் கூடிய சில நவீன நடைமுறைகள்.
பிள்ளையின் இயலுமை தொடர்பாக அவர்களின் எதிர்பார்ப்புகளை அளவீடு செய்தல்
வாழ்க்கையில் தங்கள் பிள்ளைகள் கஷ்டப்பட்டு பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்ற சாதனைகள் நடத்தைகள் அல்லது அவர்கள் பணியாற்ற வேண்டிய வேறு ஏதேனும் செயற்பாடுகள் தொடர்பாக யதார்த்தமான எதிர்பார்ப்புகளை கொண்டிருத்தல் வேண்டும். இவ் எதிர்பார்ப்புகள் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கக் கூடாது.
• யதார்த்தமான எதிர்பபார்புகளுக்கு எளிய உதாரணங்கள் சில.
• குழந்தைகள் சரியான இடத்தில் தங்களது விளையாட்டுப் பொருட்களை அடுக்கி வைத்தல்
• தங்களது ஆடையில் உள்ள பொத்தான்களை போடுதல் அல்லது கழற்றுதல்
• தங்களது சூ லேஸ்களை கட்டுதல்
• தங்களது மேசைகளை கிரமமாக வைத்தல்
• சமையலறையில் சில சிறிய உதவிகளை செய்தல்
அதே வேளை வழங்கப்படுகின்ற பின்னூட்டங்களால் செயற்பாட்டின் எதிர்பார்புகள் வலுவாக பாதிக்கப்படுகின்றது. ஆகவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சரியான முறையில் பாராட்டப்படுவதையும் பணிகளை செய்வதற்கு அவர்கள் காட்டும் அக்கறையையும் பாராட்டுதல் வேண்டும். ஒப்பிடுதல் விமர்சனம் மற்றும் அவமானப்படுத்தல் போன்றவற்றை தவிர்த்தல் வேண்டும்.
நேர்மறைச் சிந்தனை கொண்ட பெற்றோராதல்
தங்கள் பிள்ளைகள் வளர்ந்து வருவதை எண்ணி பெருமிதம் கொள்ளும் பெற்றோர்கள் அவர்கள் புதிய சூழ்நிலைகளுக்கும் முகங் கொடுக்கவும் அனுபவங்களையும் பெற நேரிடும் என்பதையும் நினைவில் கொள்ளவும். பல்வேறு சூழ்நிலைகள் மற்றும் சந்தர்ப்பங்களுக்கு அவர்கள் வெளிப்படுதல் காரணமாக பிள்ளைகளின் கற்றல் மற்றும் ஆர்வங்களும் படிப்படியாக வளரும் . பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளுக்கு சிற்நத பெற்றோராக திகழ்வதற்கு புதிய அல்லது வேறு உத்திகளை கையாள்வதற்கு பழகிக்கொள்வார்கள். அனுபவமுள்ள மற்றும் புதிய பெறறோர்கள் என இருவரும் தங்கள் பிள்ளையுடன் ஆரோக்கியமான உறவுமுறையினை நடாத்திச் செல்வதற்கு காலத்திற்கு ஏற்றவாறு புதிய உத்திகளையும் கற்றுக்கொள்கின்றனர் என்பதை உறுதி செய்தல் வேண்டும். நேர்மறைச் சிந்தனைக் கொண்ட பெற்றோராதலின் முக்கிய பெறுமதியானது சகலவற்றிலும் சிறந்தவற்றை பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கி அதிகாரம் அளிப்பதன் ஊடாக பிள்ளைகளை வலுவூட்டல் ஆகும். இது பிள்ளைகளின் சுயமதிப்பீட்டினை மேம்படுத்த உதவுகிறது.
நவீன பிள்ளைகளுக்கு ஏற்றவாறான பயனுள்ள ஒழுக்க நடைமுறைகளை பயன்படுத்தல்.
பயனுள்ள உத்திகள் பற்றி கருத்திற் கொள்ளும் போது அது நவீன அல்லது பாரம்பரிய ரீதியாகவோ இருக்கலாம். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் தங்களை பின்தொடர முதலில் அவர்கள் முன்மாதிரியாக நடந்து கொளவதுடன் சுய ஒழுக்கத்தினையும் பேணுவது முக்கியம் வாய்ந்ததாகும். டைம்அவுட்ஸ் சலுகைகளை வழங்கல் மற்றும் நன்னடத்தைகளை பாராட்டல் போன்ற பொதுவான நடைமுறைகளுக்கு அப்பால் பின்வரும் நடைமுறைகளையும் ஏற்கொள்ளப்பட்ட நடத்தைகளுக்கு மாதிரியாக பயன்படுத்தலாம்.
• பொறுப்புணர்வுடன் தெளிவான எல்லைகளை நிர்ணயித்தல்.
• அவர்களின் செயல்களின் விளைவுகளை அமைதியாகவும் தெளிவாகவும் விளங்கப்படுத்தல்.
• அவர்கள் என்ன கூற வருகிறார்கள் என்பதை செவிமடுத்தல்
• முழுமையான நேர்த்தியினை எதிர்பார்;த்தல் கூடாது.
• மாறுபட்ட விடயங்களை தெரிவு செய்ய அனுமதித்தல்.
எவ்வாறாயினும் நடைமுறைகளை கையாள்வது தொடர்பில் பெற்றோர்கள் முழுமையாக சிக்ல் அற்ற ஓர் வாழ்க்கையினை எதிர்பாரக்கக் கூடாது. அதற்கு பதிலாக பெற்றோர்கள் சிக்கல்மிக்க சூழ்நிலைகள் வரும் என தங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பிள்ளைகளையும் ஏற்றுக்கொள்ளக்க கூடிய விதத்தில் நடந்துக்கொள்வதற்கு அவர்களையும் தயார்ப்படுத்தல் வேண்டு;ம்.
ஆன்மீக பெற்றோராதல்
ஆன்மீக பெற்றோராதல் அர்த்தங்கள் நிறைந்த ஆழமான உ;கருத்தை கொண்டுள்ள நவீன பெற்றோராதல் நுட்பத்தில் பயன்படுத்ப்படும் ஒரு முறையாகும் .ஆனாலும் இது பல நூற்றாண்டு காலமாக நீடிக்கும் வரலாற்றை கொண்டுள்ளது. ஆன்மீக பெற்றோராதலின் மையக்கருத்து சுய விழிப்புணர்வை மே;மபடுத்தல் ஆகும். பிள்ளைகள் அவர்கள் யார் எனக் கண்டுபிடித்து அவர்களை பாராட்டிக் கொள்வது இதன் முதல் படியாகும். ஆன்மீக பெற்றோராதல் என்னவென்பதை விளங்கிக்கொள்வதற்கு பின்வரும் அம்சங்கள் உதவக்கூடும்.
• எல்லையற்ற அன்பின் சக்தியை பயன்படுத்தல்
• உங்களுக்கு எல்லாம் அறிந்தவர் என்பதை வெளிப்படுத்த்தாது இருத்தல்
• உங்கள் பிள்ளையிடம் உண்மையாக இருக்கின்றீர்கள் என்பதை உணர்த்துதல்.
• மனிதாபிமானம் பற்றி அவர்களிடம் விதைத்தல்; மற்றும் அவர்களின் சுயத்தைப் பற்றி கற்றலின் மதிப்பினை உணர்த்தல்
• அவர்களின் உள் நோக்கத்pனை வலுப்படுத்த வழிநடாத்தல்
-குடும்ப நேரம் மற்றும் வாழ்க்கை பொறுப்புகளுக்கும் இடையில் ஆரோக்கியமான சமநிலை ஒன்றினை பராமரிக்க கடுமையாக உழைத்தல்
- பிள்ளைகள் பாதுகாப்பாக மற்றும் பொருத்தமான முறையில் மட்டுமே தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர் என்பதை உறுதி செய்யும் வேளையில் மாத்திரம் உடல் ரீதியாக இல்லாத போது குடும்ப உறவகளை பராமரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தல்.
- கடினமான மாற்றங்கள் அல்லது குடும்பத்திற்குள் நெருக்கடிகள் ஏற்படும் போது குழந்தைகளுடன் சேர்ந்து அதனைத் தீர்த்து முன்னேறுதல்.
- குடும்பத்திற்கு தனித்துவமான மகிழ்ச்சி மற்றும் மனநிறைவினை தேடி பராமரித்தல் மற்றும் வீட்டினுள் அன்பான மற்றும் சிறந்த பிணைப்பினை ஏற்படுத்தல்.
“சிறந்த பெற்றோராதல் என்பதன் அடையாளம் குழந்தையின் நடத்தையில் அல்ல.
உண்மையாகவே சிறந்த பெற்றோரதலின் அடையானம் என்பது பெற்றோர்களின் நடத்தையில்”
ஏனையோருடன் பகிர
Recommended Articles
பொறுப்புள்ள பெற்றோராதல்
நான் உங்களை ஓர் சிந்தனைத்திறன்; நிறை;நத செயன்முறை ஒன்றை முயற்சிக்க உங்களை அழைக்கின்றேன். ஓர் அழைப்பு மணியின் ஒலியையோ மொபைலில் வரும் நொட்டிபிகேஷன் ஒலியையோ பறவைகள...
Read More