கோப்பை ஒன்றில் பருகுதல்
உங்கள் குழந்தைக்கு நீங்கள் முதலில் ஒரு கோப்பையை கொடுக்கும்போது, அதிலிருந்து பருகுவது எவ்வாறு என அவர்களுக்கு தெரியாது. சில நேரங்களில் குடிப்பதற்கோ கோப்பையை தொட்டுப்பார்க்கக் கூட விரும்ப மாட்டார்கள். பழக்கமானவற்றிலிருந்து விலகிச் செல்வதற்கும் புதியவற்றை பழகுவதற்கும் சிறிது காலம் எடுக்கும். எனவே கோப்பையில் இருந்து பருகும்படி கட்டாயப்படுத்தாதீர்கள். பதிலாக அதனை ஒரு சிறு வேடிக்கை விளையாட்டுடன் சிறிது சிறிதாக பழக்கப்படுத்தவும். அவர்களின் அட்டகாசங்களை ரசித்திட தயாராகுங்கள்.
படிமுறை 1:
முதலில், அவர்கள் கோப்பையையும், அதன் உள்ளே இருக்கும் திரவத்தையும் ஆராய்ந்து உணரட்டும்.
படிமுறை 2:
நீங்கள் அதை உங்கள் குழந்தையின் வாய்க்கு கொண்டு செல்லும் போது, உங்கள் குழந்தை கோப்பையை பிடித்து திரவத்தை மணந்து பார்க்கட்டும். பின்னர் மெதுவாக சிறிதளவு திரவத்தை உள்ளெடுக்க அவர்களுக்கு உற்சாகமளியுங்கள்.
படிமுறை 3:
இறுதியாக, உங்கள் பிள்ளை கோப்பையை மீண்டும் அதே இடத்தில் வைக்க உதவுங்கள்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles
நூலைப் போல சேலை தாயைப் போல பிள்ளை
இந்த வயதில், உங்கள் குழந்தை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்கிறார்கள்! அவர்கள் உங்களைப் பின்பற்ற விரும்புவார்கள், எனவே இது உங்களுக்க...
Read Moreஉங்கள் குழந்தைகளுக்கு விரல்களை கொண்டு விளையாட்டுகளை கற்றுக்கொடுத்தல்.
நீங்கள் சிறியவராக இருந்தபோது உங்கள் விரல்களால் விளையாடுவதை எவ்வளவு ரசித்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்போது அந்த நினைவுகளை உங்கள் சிறியவருக்கு...
Read Moreகைவிரல்களால் உணவினை உட்கொள்ள கற்றுக்கொள்ளல்
நீங்கள் எவ்வாறு சாப்பிடுகிறீர்கள், எவ்வாறு உணவு பாத்திரங்களை உபயோகின்றீர்கள், உங்களின் அசைவுகள் எவ்வாறு இருக்கின்றது என்பதனை அவர்கள் நன்றாக உற்று நோக்குவார்கள்....
Read More