குழந்தையின் ஆரோக்கியத்திற்கு உறக்கம் தாக்கத்தை ஏற்படுத்துவது எவ்வாறு?

Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

குழந்தையின் ஆரோக்கியத்திற்கு உறக்கம் தாக்கத்தை ஏற்படுத்துவது எவ்வாறு?

சரியான உறக்கமின்மை குழந்தை மேலதிக கலோரி உட்கொள்வதற்கு ஏதுவாகமையும் என்பதை நீங்கள் அறிவீர்களா?
உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளர மற்றும் அபிவிருத்தியடைய உறக்கம் இன்றியமையாத ஒன்றாகும். விசேடமாக பரிந்துரைத்துள்ள அளவில் குழந்தை நாளாந்தம் 11 – 14 மணித்தியாலங்கள் உறங்கிட வேண்டும். சரியான உறக்கமற்ற குழந்தைகள், ஆராக்கியமற்ய விதத்தில் எடை அதிகரிப்பிற்கு உள்ளாவதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளதை தெரிவித்தால் நீங்களும் புதுமையடையலாம்.

img

பரிசோதனை முடிவுகளுக்கமைய இரவு நேரங்களில் சிறிதோர்ட உறக்கத்தினை பெற்றிடும் 16 மாத குழந்தைகள், 5 மாதத்திற்கு பின் அதிக கலோரிகளை உட்கொள்கிறார்கள். அதிகமாக நள்ளிரவிற்கு முன் பருகிடும் பாலினால் இதுபோன்ற மேலதிக கலோரிகளை பெறுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக, 10 மணி;த்தியாலங்களுக்கும் குறைவாக உறங்கிடும் சிறு குழந்தைகள், 13 மணித்தியாலங்களுக்கும் மேலாக உறங்கிடும் குழந்தைகளோடு பார்க்கையில் நான்கு மடங்களவில் மேலதிக கலோரிகளை பெற்றுக்கொள்கிறார்கள்.
குழந்தையின் உறக்கத்தினை அவதானித்திடுங்கள்
குழந்தையின் சிறு தூக்கம் மற்றும் அசௌகரிய தன்மையுடன் சம்பந்தம் உள்ளதா என்பதை ஆராயும் பரிசோதனைகளிடையே அதிக அவதானிப்பினை பெற்றது, கீழ் குறித்த சில காரணிகளே.
கலோரி அளவு அதிகரிப்பிற்கான காரணிகள்
•    உடற்பயிற்சி மற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுதல் குறைவடைதல்
•    இலக்ட்ரோனிக் அங்கங்களை அதிகம் பயன்படுத்தல்
•    பசி மற்றும் வயிற்றை நிரப்பிடல் உடனான தொடர்புகள் மாற்றமடைதல்
•    ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள்
இக் கற்றல்களினால் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முடிவுகள் பெரிதும் வளர்ந்தோரை குறிப்பிடுவதோடு, குழந்தைகள் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. இருப்பினும், பெரியோரின் உறக்கம் குறையுமளவிற்கு அது குழந்தைகளையும் பாதிக்கும் உன்பது விஞ்ஞான ரீதியாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
பரிசோதனைகளுக்கமைய குறைவான உறக்கம் பெரியோரின் ஹோமோன்களில் தாக்கத்தினை ஏற்படுத்திடும். பரிசோதனைகளுக்காக பங்கேற்றவர்களின் உறக்கத்தினை மட்டுப்படுத்திய போது, அவர்களின் உடலில் லெப்டின் (வயிறு நிரம்பியதாக உணர வைக்கும் ஹோமோன்) குறைவடைந்ததோடு, நிக்ரெலின் (பசியை அதிகரிக்கும் ஹோமோன்) அதிகமாகவும் இருப்பதைக் காண முடிந்தது. இம்முடிவுகள் பெரிதும் பெரியோரை சார்ந்ததாக இருப்பதோடு, குழந்தைகளுக்கும் இது போன்ற தாக்கமுள்ளதா எனும் பரிசோதனைகள் தொடர்கின்றன.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உறக்கம், செயற்பாடு மற்றும் எடை ஆகியவற்றில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். இரவில் குழந்தை உறங்குவது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் எதிர்காலத்திற்கும் முக்கியம் என்பதை பெற்றோர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

மூலக்குறிப்பு

▪    Felso R, Lohner S, Hollody K, et al. Relationship between sleep duration and childhood obesity: Systematic review including the potential underlying mechanisms. Nutr Metab Cardiovasc Dis 2017; 27(9):751-61. 
▪    Fisher A, McDonald L, van Jaarsveld CHM, et al. Sleep and energy intake in early childhood. Int J Obesity 2014; 38(7):926- 9. 
▪    Hirshkowitz M, Whiton K, Albert SM, et al. National Sleep Foundation’s sleep time duration recommendations: methodology and results summary. Sleep Health 2015; 1(1):40-43. 
▪    McDonald L, Wardle J, Llewellyn CH, et al. Sleep and night-time energy consumption in early childhood: a population-based cohort study. Pediatr Obes 2015; 10(6):454-60. 

Recommended Articles