இலக்ட்ரோனிக் அங்கங்களை அதிகம் பயன்படுத்து குழந்தைகளின் எடை அதிகரிப்பிற்கான காரணியா?
நீங்கள் அறிவீர்களா? சிறு குழந்தைகளை சுற்று சுழலில் விளையாட அனுமதிக்காது, தொலைக்காட்சி. கைத்தொலைப்பேசி போன்ற சாதனங்களுடன் அதிக நேரம் செலவிட அனுமதிப்பது, எதிர்கால ஆரோக்கியத்திற்கு தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதை.
தொடர்ச்சியான பரிசோதனை முடிவுகளுக்கமைய, செயற்பாடு மற்றும் ஆரோக்கியமான எடை மட்டத்திற்கிடையே தெளிவானதோர் பிணைப்பு உள்ளது. இலக்ட்ரோனிக் சாதனங்களுடன் அதிக நேரம் செலவளிப்பதால் பல குழந்தைகள் சூழல் சார் செயற்பாடுகள், விளையாட்டுகளுக்கு நேரத்தை செலவிடுவதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது அவர்களின் நீண்டகால ஆரோக்கியத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்திடும் மிகப்பெரிதோர் பிரச்சினையாகும். குழந்தைகள் செயற்திறனாக இருப்பது போல் தெரிந்தாலும், அது உண்மையானதன்று. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்கமைவாக 2 வயதுடைய குழந்தைகள் செயற்திறன் மட்டத்தில் குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெற்றோரின் பொறுப்பு
சாதனங்களை பயன்படுத்துவதை குறைப்பது மட்டும் இதற்கு போதுமானதன்று. குழந்தைகளின் செயற்திறனுக்கு பெற்றோரின் தட்டிக்கொடுத்தலும் மிக முக்கிய காரணியாகும் என்பது பரிசோனைகள் மூலமும் வெளிகாட்டப்பட்டுள்ளது. அதற்கமைய குறைவான சாதன பாவணையுடைய பெற்றோரின் குழந்தைகளும் குறைவான சாதன பயன்பாட்டு விருப்பினையே வெளிகாட்டுகிறது. எனவே முதலில் பெற்றோர் குழந்தைக்கு உதாரணமாக இருக்குமளவில் செயற்படுவது ஆரோக்கியமானதோடு, குழந்தையோடு பேசும் போதும் குறித்த சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது சிறப்பாகும். குழந்தையோடு தொடர்பில் இல்லாதிருப்பினும் அவர்கள் காணும் தொலைவிலும் இச்சாதனங்களை பயன்படுத்துவது அவர்களுக்கு தாக்கத்தினை ஏற்படுத்திடலாம்.
சிறுகுழந்தை பருவத்தில் செயற்திறனாக இருப்பது நீண்டகால ஆரோக்கியத்திற்கு சிறப்பானதாகும் என கொள்வது பிழையன்று. இது உங்களின் குழந்தை படிப்படியாக அசைவுகளுக்கு, சுயமான வாழ்க்கை முறைக்கு பழகிடுமோர் காலமாகும். இ;வ்வயதில் தொடர்ச்சியாக வெளிப்புறத்தில் விளையாட அனுமதித்தல் மிக முக்கியமானதாகும். செயற்திறனாக இருப்பது மகிழ்ச்சியை தந்திடும் என்பதை குழந்தை படிப்படியாக உணர்வதோடு, வளரச்சியுடன் விளையாடவும் காலத்தை செலவிட குழந்தைகள் அதிக விருப்பத்தினை வெளிகாட்டிடுவார்கள்.
செயற்பாடுகளுக்கான ஆலோசனைகள்
1 முதல் 3 வயதிற்கிடையேயான குழந்தைகள் நாளொன்றிற்கு 1 முதல் 3 மணித்தியாலங்கள் வரை பல்வகை செயற்பாடுகளில் ஈடுப்படுத்துவது சிறப்பானதாகும். இச்செயற்பாடு முறையானதாகவோ முறையின்றியோ சுதந்திரமாக ஈடுப்படும் விதமாக இருப்பது சிறப்பாகும். முறையான செயற்பாடு என்பது அலகுவான விதிமுறைகளுக்கமைய விளையாட அனுமதிப்பதோடு, முறையற்றது என்பது குழந்தை விரும்பிடும் விதத்தில் விளையாட இடமளிப்பதாகும். நாள் முழுதும் இவ்வாறு பல்வகை செயற்பாடுகளுக்கு நேரத்தினை ஒதுக்கிடுங்கள். அனைத்தையும் ஒரே நேரத்தில் மேற்கொள்வது அத்தியாவசியமன்று. உங்கள் குழந்தை உறங்கிடும் நேரத்தில் மட்டும் செயற்திறனின்றி இருப்பது சிறந்ததாகும்.
மூலக்குறிப்பு
▪ Downing KL, Hnatiuk J, Hesketh HD. Prevalence of sedentary behaviour in children under 2 years: A systematic review. Prev Med 2015; 78:105–14.
▪ Kuzik N, Carson V. The association between physical activity, sedentary behaviour, sleep, and body mass index z-scores in different settings among toddlers and pre-schoolers. BMC Pediatr 2016; 16: doi 10.1186/s12887-016-0642-6.
▪ Wijtzes AI, Kooijman MN, Kiefte-de Jong JC, et al. Correlates of physical activity in 2-year-old toddlers: The Generation R Study. J Pediatr 2013; 163(3):791-9.
▪ Xu H, Wen LM, Rissel C. Associations of maternal influences with outdoor play and screen time of two-year-olds: Findings from the Healthy Beginnings Trial. J Paediatr Child Health 2014; 50:680-6.
▪ Xu H, Wen LM, Rissel C. Associations of parental influences with physical activity and screen time among young children:
a systematic review. J Obes 2015; 2015:546925
ஏனையோருடன் பகிர
Recommended Articles
Romesh Jayasinghe
ஆரம்பகால குழந்தை மேம்பாட்டு உளவியலைப் புரிந்துகொள்ளுதல்
உளவியல் என்பது மனித நடத்தை பற்றிய ஆய்வு மற்றும் குழந்தை உளவியல் என்பது உளவியலின் பயன்பாட்டு கிளை ஆகும், இது குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் இயல்பான மற்றும் அசாத...
Read Moreகுழந்தையின் உறக்கம் பற்றி அறிவோம்
‘குழந்தையை உறங்க வைப்பது எவ்வாறு?’ இது ஒவ்வொரு பெற்றோரும் எதிர்கொள்ளுமோர் பிரச்சினையாகும். உலகம் முழுதுமான பெற்றோர் பின்பற்றிடும் வழிமுறைகள் பற்றி இக்கடிதத்தில்...
Read MoreNimali Buthpitiya
உங்கள் குழந்தையின் சரியான வளர்ச்சிக்கு உதவிடுங்கள் - 12 மாதங்களேயான உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கான மைல்கற்கள்
நீங்கள் உங்கள் குழந்தையை பெற்றெடுத்தப்பின் உங்கள் வாழ்வு பெரிதும் மாற்றமடைகின்றது. உங்கள் பகல்கள் குறுகி இரவுகள் நீண்டாலும் இல்லம் இன்புற்று எதிர்காலம் வாழ்வை ர...
Read More