12 – 18 மாத குழந்தைகளுக்கான செயற்பாடுகள்

Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

மூட்டியிடல் முதல் எழுந்து அடி வைத்தல் வரையிலான முதல் படிகளை கடக்கும் உங்கள் குழந்தை, மழலை பருவத்திற்கு வருகிறது. முந்தைய காலங்களை விட இதன் போது செயற்திறனாவதை காணலாம். அவர்களின் சிந்தனை, அசைவுகள் மற்றும் எல்லைகள் பற்றிய அறிவுசார் அபிவிருத்தியினை பெறுவது இக்காலத்தினுள்ளேயே. கீழ் குறித் ஐந்து செயற்பாடுகளை வீட்டிலேயோ அல்லது வீட்டின் வெளியேயோ பரிட்சித்து பார்த்திட முயற்சித்திடுங்கள்.
12 முதல் 18 மாத கால எல்லை குழந்தையின் மிக அழகான காலமாகும். உங்கள் குழந்தை விளையாடும் போது சிந்திக்க தொடங்கும். எனவே அவர்களுடனான செயற்பாட்டின் பரப்பினை அதிகரித்திடும் சந்தர்ப்பம் உங்களுக்கு உள்ளது. விளையாட்டு பொருட்கள் மற்றும் நீங்கள் உருவாக்கிடும் விளையாட்டுகள் போன்று அவர்கள் விரும்பிடும் விளையாட்டுகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள அவர்கள் ஆர்வம் காட்டுவதை நீங்கள் அவதானிக்க முடியும்.

img

மகிழ்ச்சியான அனுபவங்கள் போன்று குழந்தையோடு இணைவதற்கும், ஆரோக்கியமான வளரச்சிக்கும் இதுபோன்ற செயற்பாடுகள் பக்கபலமாக அமைந்திடும். குழந்தையின் செயற்திறனை அதிகரித்திடுவதற்கான சில மணித்தியால செயற்பாடுகள் பற்றிய அறிவுறுத்தல்களை பல நாடுகளில் காணலாம். அவர்களின் அன்றாட செயற்பாடுகள் முறையாக அல்லது முறையின்றி (சுதந்திரமாக) மேற்கொள்ள கூடியதோடு, பெரியவர் ஒருவரின் அவதானிப்பின் கீழ் நியதிகளுக்கமைய மேற்கொள்ளும் செயற்பாடுகள் விசேடமானதாகும்.
சுhதாரண குழந்தைகளுக்கான விளையாட்டுகள் போன்று முiறான குழு செயற்பாடுகளும் இதனுள் அடங்கும். முறையற்ற செயற்பாடுகள் என்பது, பெரியவர் ஒருவரின் குறைவான பங்களிப்புடன் குழந்தை விரும்பிடும் விதம் சுதந்திரமாக விளையாட இடமளித்தலாகும். 
இவ் வயதில் செயற்திறனாக விளையாட அனுமதிப்பதன் மூலம் குழந்தையின் சக்தி மற்றும் அசைவு திறன் அபிவிருத்தியடைவதோடு வாழ் நாள் முழுதும் தொடர்ந்திடும் ஆரோக்கியமான பழக்கங்களை ஏற்படுத்திடவும் முடியும்.
1. விரட்டிப்பிடித்தல

img

உங்கள் குழந்தை நன்றாக ஓடி பாய்ந்து நடந்திட தொடங்கிய பின் செய்திடக்கூடிய செயற்பாடுகள். இதற்கு வெளியிடம் மிகவும் சிறப்பானதோடு, விளையாடும் இடம் பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்திடுங்கள். குழந்தை உங்களை விரட்டுவதையும், நீங்கள் குழந்தையை விரட்டிப்பிடிப்பதையும் மாறி மாறி மேற்கொள்ளுங்கள். குழந்தை உங்களை பிடித்திடும் ஒவ்வொரு முறையும் தூக்கியணைத்து வெற்றியை கொண்டாடிடுங்கள்.
இச்சிறந்த விளையாட்டு, குழந்தையின் தசை வளர்ச்சி மற்றும் அசைவுகள் போன்று நோக்கம் பற்றிய ஆற்றலையும் மேம்படுத்திட உதவிடும்.
2. குதிரையோட்டம் டிக் டிக் டிக

img

இவ்வயதில் குழந்தைகள் வாகனம், சைக்கிள், குதிரை போன்ற விளையாட்டு பொருட்களுடன் விளையாட அதிகம் ஆர்வம் காட்டிடுவார்கள். பெரியோரின் கண்காணிப்பின் கீழ் வெளியிடத்தில் இது போன்ற விளையாட்டுகளை விளையாட அனுமதித்தல் அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்திடும். 
இச் செயற்பாட்டினால் குழந்தைகள் தனியாக தங்களின் சக்தியை பயன்படுத்தி ஏதேனும் ஒன்றை செயற்படுத்தி மகிழ்ச்சியடைவார்கள். அத்தோடு இதன் மூலம் குழந்தையின் கால்களின் தசைகளுக்கு பலம் கிடைத்திடும்.
3. குமிழி விளையாட்டு

img

பூங்கா அல்லது வீட்டு வாசலில் செய்திடக்கூடிய சிறந்த செயற்பாடாகும். சவர்க்கார குமிழிகளை ஊதி அதனை கைகளினால் பிடித்திட குழந்தையை ஊக்குவித்திடுங்கள். இது பேன்று கால்களை சமநிலைப்படுத்தி நடந்திடும் வயது குழந்தைகளுடன் இவ்விளையாட்டினை விளையாடுவது சிறப்பானதாகும்.
சுற்றி ஓடவும், விரட்டவும், குமிழிகளை பிடிக்க முனைவதும் குழந்தையின் கை – கண்களின் தொடர்பு மற்றும் சமநிலையினையும் மேம்படுத்தும்.
4. தடைகளை தாண்டல

img

நாற்காலி குஷன், தலையணை போன்றவற்றை வீட்டினுள் தடைகளை போன்று ஏற்படுத்தி குழந்தை அதனிடையே தவழ்ந்து, மண்டியிட்டு வர செய்திடுங்கள். குழந்தைக்கு அதிக மகிழ்ச்சியினை ஏற்படுத்திடும் இது போன்ற செயற்பாடுகள் உங்களின் அவதானிப்புடன் மேற்கொள்ளுங்கள்.
இது போன்ற செயற்பாடுகளினால் குழந்தையின் அசைவாற்றல் மற்றும் நோக்கம் போன்றவை மேம்படுவதோடு, சக்தி மற்றும் முயற்சி போன்ற ஆற்றல்களும் மேம்படும்.
5. பெட்டி விளையாட்டு

img

பெரிதோர் கார்ட்போட் பெட்டி இருப்பின் அதனை குழந்தை விளையாட வழங்கிடுங்கள். மகிழ்ச்சிக்காக மறைந்திருத்தல், வாகனம் அல்லது ரொக்கட்டாக விளையாடல், சிறிய அணிலை போன்று பெட்டியினுள் சுற்றிவரவும் பயன்படுத்திட முடியும். பாதுகாப்பு பொருட்டு உங்களின் அவதானிப்புடன் மேற்கொள்ளுங்கள்.
சுத்தமானதோர் பெட்டியை குழந்தைக்கு வழங்கிடுங்கள். குழந்தையின் அசைவு, அவதானிப்பு மற்றும் சமநிலை போன்ற திறன்கள் மேம்படுவதோடு, குழந்தையின் சிந்தனை ஆற்றலினால் குழந்தை ஓர் விளையாட்டினை உருவாக்கிடவம் பக்கபலமாக அமைந்திடும்.

மூலக்குறிப்பு

▪    Okely AD, Ghersi D, Hesketh KD, et al. A collaborative approach to adopting/adapting guidelines – The Australian 24hour movement guidelines for the early years (birth to 5 years): an integration of physical activity, sedentary behavior, and sleep. BMC Public Health 2017; 17(Supple 5):869. doi: 10.1186/s12889-017-4867-6. 
▪    Shelov SP & Altmann TR (Eds.). (2009). American Academy of Pediatrics. The complete and authoritative guide Caring for your baby and young child birth to age 5 (5th ed.). USA: Bantam Books. 
▪    Society of Health and Physical Educators (SHAPE). Active start: A statement of physical activity guidelines for children from birth to age 5. 2nd ed. Reston, VA: SHAPE America; 2009. Available at: https://www.shapeamerica.org/standards/guidelines/activestart.aspx (Accessed August 8 2018) 
▪    Tremblay MS, Chaput J, Adamo KB, et al. Canadian 24-hour Movement Guidelines for the Early Years (0-4 years): An integration of physical activity, sedentary behaviour, and sleep. BMC Public Health 2017; 17(Suppl 5):874 doi 10.1186/s12889-017-4859-6. 
▪    https://pathways.org/growth-development/toddler/milestones/ (Accessed August 8 2018) 
▪    https://pathways.org/topics-of-development/play/(Accessed August 8 2018) 
▪    https://pathways.org/watch/parents-guide-structured-vs-unstructured-play/(Accessed August 8 2018) 
▪    https://pathways.org/baby-milestones-calendar/(Accessed August 8 2018) 
▪    https://pathways.org/baby-milestones-calendar/(Accessed August 8 2018) 
▪    https://pathways.org/baby-milestones-calendar/(Accessed August 8 2018) 

Recommended Articles