பெற்றோரின் அன்பே குழந்தைகள் வாழ்வில் வெற்றிகளை தந்திடும்
Nimali Buthpitiya
ஒரு குழந்தையை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மேம்படுத்திட, அவர்களின் தேவைகளுக்கு சிறந்த பதில்களை வழங்கும் பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் இருப்பது கட்டாயமானதாகும். பெற்றோரைப் பொறுத்தவரை, அத்தகைய உறுதியான பதில்களை வழங்குவது பெற்றோரின் பாத்திரத்திற்கு அர்த்தத்தை அளிப்பதோடு, குழந்தையுடனான அவர்களின் உறவையும் வலுப்படுத்துகிறது.
பெற்றோரின் நிபந்தனையற்ற அன்பு ஒரு குழந்தையை வாழ்க்கையில் வெற்றிபெற உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆயத்தப்படுத்துவதோடு உற்சாகப்படுத்துகிறது. பெற்றோரின் அன்பும் பாசமும் எப்போதும் குழந்தையை அரவணைத்திடும். ஆறுதல், கவனிப்பு, வளர்ப்பு, ஏற்றுக்கொள்வது அல்லது எளிமையான அன்பு, அரவணைப்பு மற்றும் முத்தங்கள், பாராட்டுக்கள் போன்ற வெளிப்பாடுகள் ஒரு குழந்தையை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், உலகை வெல்ல தயாராக்கிடும்; ஒரு அற்புதமான சக்தியைக் கொண்டுள்ளது.
பெற்றோரின் அன்பு இல்லாவிட்டால் என்ன நடக்கும்?
பெற்றோர்களே குழந்தைகளின் வாழ்க்கையுடன் இணைந்துள்ள நபர்கள். பெற்றோர் - குழந்தை உறவு என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் சமமாக முக்கியமானது. ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த உணர்ச்சி மற்றும் உளவியல் நல்வாழ்வு பெற்றோரின் அன்பு மற்றும் குழந்தையுடனான அவர்களின் உறவைப் பெரிதும் சார்ந்துள்ளது. பெற்றோரிடம் இருந்து பெற வேண்டிய அன்பையும் அக்கறையையும் பெறாவிட்டால் குழந்தையின் குணமும் ஆளுமையும் தாக்கங்களுக்கு உள்ளாகிடும்.
பெற்றோர்களால் நேசிக்கப்படாத அல்லது வேறுவிதமாகக் கூறினால், போதுமான அளவு நேசிக்கப்படாத அல்லது அன்பைக் காட்டாத குழந்தைகள், தாம் நிராகரிக்கப்பட்டதாக உணர்கிறார்கள். பணம் உட்பட அனைத்து உடல் வசதிகளும் வளங்களும் ஒரு குழந்தைக்கு வழங்கப்பட்டாலும், பெற்றோரின் அன்பு இல்லாவிட்டால், குழந்தை பெற்றோரால் நிராகரிக்கப்பட்டதாகவே உணர்வார்கள். இது பல வழிகளில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமற்றது மற்றும் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான உறவை தூரமாக்கிடவும் பலவீனப்படுத்தவும் செய்கிறது.
- இத்தகைய குடும்பங்களுடன் வளரும் குழந்தைகள், குழந்தைப் பருவத்திலும் முதிர்வயதிலும் உளவியல் மற்றும் உடல் ரீதியான நோய்களை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.
- இது அவர்களின் சுயமரியாதை மற்றும் சுய மதிப்பைக் குறைக்கிறது.
- குழந்தைகள் சிறந்த எடுத்துக்காட்டுகள் மற்றும் சமூக நடத்தைகளை பின்பற்றவில்லையாயின், சமூக திறன்களின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கிறது.
- குழந்தைகளுக்கு தேவையான ஆதரவு, அன்பு மற்றும் கவனிப்பு வழங்கப்படாவிட்டால் பாதிக்கப்படும் மற்றொரு பகுதி கல்வி செயல்திறன் ஆகும்.
பெற்றோரின் அன்பு குழந்தைகளுக்கு எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.
பரிசோதனை முடிவுகளுக்கமைய ஆரம்ப காலத்தில் பெற்றோரின் அன்பை பெறல், குழந்தை பருவம் முதல் வளரும் வரை சிறந்த தாக்கங்களை ஏற்படுத்திடும். பெற்றோரின் அன்பு குறைவின்றி கிடைத்திடும் குழந்தைகள் வளர்ந்த பின்பும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதாக வெளிப்பட்டிருக்கின்றது.
இன்று குழந்தையுடனான உங்கள் உறவின் தரம் அவர்களின் எதிர்கால வாழ்க்கையின் தரத்தை திறம்பட முன்னறிவிப்பதாகும்!
பெற்றோரின் நிபந்தனையற்ற அன்பு அரவணைப்பு, ஆதரவு, கவனிப்பு போன்று அன்பிலிருந்து உருவாகும் அனைத்தும், குழந்தைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், மதிப்புமிக்கதாகவும், உணர்ச்சிப்பூர்வமாக பாதுகாப்பாகவும் உணர உதவுகின்றன. அவர்கள் சுயமரியாதையுடன் சிறந்த நிலையினை அடைகிறார்கள். கல்விப் பணிகளில் சாதனையாளர்களாக மாறுவார்கள். சிறந்த சமூக திறன்கள் மற்றும் உணர்ச்சி ஒழுங்குமுறை திறன்களை வளர்த்துக் கொள்வார்கள். எனவே பெற்றோரின் நிபந்தனையற்ற அன்பு, ஆரோக்கியமான குழந்தையை வளர்க்கும் பெரும் சக்தியைக் கொண்டுள்ளது!
குறிப்புகள்:
- உங்கள் குழந்தைகளை நிபந்தனையின்றி நேசிக்கவும்.
- அவர்கள் யார் என்பதுடன் அவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
- பெற்றோர்களாக சிறந்த நடத்தைகளை முன்மாதிரியாகக் காட்டுங்கள்.
- உங்கள் பிள்ளை குழந்தைப் பருவத்திலிருந்து முதிர்வயது வரை வளர்ச்சி பற்றி அறிந்திடுங்கள்.
- செயல்கள் மற்றும் வார்த்தைகள் மூலம் உங்கள் அன்பை அவர்களிடம் காட்டுங்கள்.
- தேவைப்படும் போது பெற்றோரின் கவலைகள் பற்றி நிபுணத்துவ ஆலோசனையை நாடுங்கள்.