Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

அழகான விடயங்களை வெளிப்படுத்துவோர் பிள்ளைகள்

Dinusha Manjarie Wickremesekera

பிள்ளைகள் அவர்களை வெளிப்படுத்துவதற்கு எவ்வாறு உதவலாம்.

பிறந்த மழலைகளைப் பற்றி நாம் அக்கறை செலுத்துவோம். அவர்கள் வெளிப்படுத்தும் முதல் விடயங்களை காண்பதற்கும் கேட்பதற்கும் ஆர்வமாக இருப்போம். அவர்களின் முதல் புன்னகை, முதல் சிரிப்பு, முதல் அடி முதலில் உச்சரிக்கும்   வார்த்தை என. முதலாவதாக அம்மாவா அல்லது அப்பாவ சொல்வார்கள் என காத்திருப்போம். குழந்தைகள் அதிகமாக கேட்கும் சொற்களை விரைவாகவும் முதலவதாகவும்  உச்சரிக்க தொடங்குவார்கள் அதனால் பெற்றோர்கள் அம்மா மற்றும் அப்பா எனவும் மம்மி ,டெடா எனவும் அழைத்துக்கொள்வார்கள்.இவ்வாறு பெற்றோர்கள் குழந்தைகள் அவர்களது முதல் சொல்லினை உச்சரிக்க உதவலாம். குழந்கைள் கேட்டல், கற்றல் வாசித்தல் செய்றபாடுகளின் மூலம் அவர்களின் சொற்களஞ்சியத்தை அதிகரித்துக் கொள்ள முடிவதுடன் மற்றவர்களுடன் சரியான முறையில் தொடர்பாடலினை மேற்கொள்ளவும் முடிகிறது.

மொழி மிகவும் முக்கியமானது ஏனெனில் குழந்தைகளுக்கு அவர்கள் சிந்திப்பதற்கும் அவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை அறிந்துக்கொள்ளவும் அத்தோடு வேறு ஒருவர் என்ன உணர்கிறார்கள் என்பதையோ அல்லது மற்றவர்கள் உளம் அறிந்து செயற்படவோ உதவுகிறது.

தொடர்பாடலுக்கான ஆற்றிலின் வளர்ச்சி

 

வயது

அவர்களை வெளிப்படுத்தும் காரணங்கள்

வெளிப்படுத்தும் விதம்

1 வயது வரை

உணவு பாதுகாப்பு அன்பு என்பவற்றிற்காக

அழுதல் மெதுவாக குரல் கொடுத்தல் சொற்களால் வெளிப்படுத்தல்

2 வயது வரையும் அதற்கு மேற்பட்டவர்களும்;

உணவு பாதுகாப்பு அன்பு குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் நபர்களுக்காக

குறிப்பிட்ட நிலை வரை கருத்துக்களை வெளிப்படுத்தல்.            

1-2 சொற்களை ஒன்றாக பயன்படுத்தல்

2 வயதில் 12-400 சொற்கள் வரை சொற்களின் எண்ணிக்கை மாறுபடும்.

2 வயதிற்கு மேல் ;

அவர்களுக்கு தேவையானதை பெற ,அவர்கள் என்ன பார்க்கிறார்கள், அவர்களின் விருப்பம்

போன்றன..

அவர்களின் கருத்துக்கள் அனுபவங்கள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துதல் அதிகரிக்கும்.

பொதுவாக பயன்படுத்தப்படும் சொற்களில் அரைவாசிக்கு அதிகமாக தொடர்ச்சியாக மொழி கற்றல் செயற்பாடுகளிலிருந்து பெறுகின்றனர்..

இலக்கண விதிமுறைகளை சரியாக பயன்படுத்த தொடங்குகின்றனர்.

(ஆங்கில மொழி- சகல பிள்ளைகளும் இலக்கணத்தில் எதிர்ப்பார்க்கப்படும் அளவில் பிழைகளை விடுகின்றனர்)  

 

அவர்களை வெளிப்படுத்துவதற்காக பயன்படுத்தும் சொற்களின் எண்ணிக்கை 1000 வரையிலும் அதிகரிக்கலாம். சொற்களை இலகுவாக உள்வாங்கி அதன்; அர்த்தங்களையும் விளங்கிக் கொள்கின்றனர்.

அவர்கள் தேர்ச்சிப் பெற்ற சொற்களின் எண்ணிக்கை ஆனது ஒவ்வொரு பிள்ளைகளும்  தேர்ச்சி அடைதல் தொடர்பில் ஏற்றுக்கொள்ளும் சவால்களின் ஆர்வத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பிள்ளையினதம் தனிப்பட்ட தேர்ச்சி பெறல் தஙகியுள்ளது. அவர்கள், அவர்களுக்கு வழங்கப்படும் உடல் ரீதியான சவால்களில் ஏற்றுக் கொள்ள விரும்புகிறார்களா? அவ்வாறாயின் அவர்கள் விடயங்களை விரைவாக உள்வாங்கிக் செயற்படுவர். அவர்கள் சமூக பரிமாறல்களின் சவால்களில் பங்குக்கொள்ள விரும்புவார்களாயின் அவர்கள் தொடர்பு கொள்ளவும் தங்களை சிறப்பாக வெளிப்படுத்தவும் அதன் மூலம் விரைவாக பேசவும் விரும்புவார்கள். நீங்கள் பிள்ளை பேசும் வரை காத்திருக்கும் வேளையில் இந்த தனிப்பட்ட அட்டவணையை கவனத்தில் கொள்ளுங்கள்.

 

 

பேசப்படாத குழந்தைகளுக்கு எந்த மொழித் திறனும் வராது என்பது நமக்குத் தெரியும். குழந்தைகள் அதிகம் கேட்கும் மொழியைப் பேசுவார்கள் என்பதும் நமக்குத் தெரியும். அவர்கள் கேட்டு; பழகிய சொற்களையும் பயன்படுத்துவார்கள். மேலும் அவர்கள் வார்த்தைகளைச் சொல்லுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அவற்றின் அர்த்தத்தை அறிந்து கொள்வார்கள். குழந்தைகளின் தகவல் தொடர்பு திறனை மேம்படுத்துவதற்கு சிறு வயதிலிருந்தே நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன

 

1.         சுப்பர்மார்க்கட், மிருகக்காட்சிசாலை, பூங்கா என பலதரப்பட்ட அனுபவங்கள் அவர்களுக்கு இருப்பதை உறுதிசெய்யவும். அவர்களுடன் பேசுங்கள், அவர்கள் எதைப் பார்க்கிறார்கள் மற்றும் அனுபவிக்கிறார்கள் என்பதை விளக்குவதன் மூலம் அவர்கள் அவற்றை வெளிப்படுத்த முடியும்.

 

இது அவர்களின் புலன்கள் மூலம் உலகை அனுபவிக்க உதவுகிறது, குறிப்பாக அவர்கள் பார்ப்பது, கேட்பது மற்றும் தொடுவது ஊடாக

 

2.அவர்களுக்குப் வாசியுங்கள்: கதைகள் அவர்கள் பெற்ற சில அனுபவங்களை வலுப்படுத்த ஒரு சிறந்த வழியாகும். எனவே அவர்களுக்கான கதைப் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும்போது இதைக் கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகள் என்ன சொல்வார்கள்; , செய்வார்கள் மற்றும் சிந்திக்கும் விதம் என்பதை வடிவமைக்க கதை உதவி புரிகிறது. இவை அனைத்தும் அவர்களின் உலகக் கண்ணோட்டத்தை வளர்ப்பதற்கு முக்கியம்.

 

3. கருத்துக்கள் மற்றும் உணர்வுகளைப் பற்றிய அவர்களின் புரிதலை நீங்கள் கட்டியெழுப்ப விரும்புகிறீர்கள்- குறிப்பாக பெரியது மற்றும் சிறியது, மேல் மற்றும் கீழ், மகிழ்ச்சி மற்றும் சோகம் போன்றவை. நீங்கள் இருவரும் எதைப் பார்க்கிறீர்கள் அல்லது அனுபவிக்கிறீர்கள் என்பதை விவரிக்கும்போது இதைச் செய்வீர்கள்.

 

 

முக்கிய விஷயம் பேசுதல். எளிய வார்த்தைகள் மற்றும் செயல்கள் மற்றும் வெளிப்பாடுகளைப் பயன்படுத்தி பேசுங்கள், இதனால் உங்கள் பிள்ளை செவிமடுக்கும் அத்தோடு நீங்கள் கேள்விகளையும் கேட்க வேண்டும், அவர்களுக்கு பதிலளிக்க போதுமான நேரத்தை ஒதுக்குங்கள். பதிலைக் கேட்டு, உங்களுக்குப் புரியவில்லையென்றாலும் நீங்கள் கேட்டதாக நினைப்பதை  வாய்மொழியாகச் சொல்லுங்கள். இல்லையெனில் குழந்தைப் பேச்சைக் குறைத்து விடுவார்கள். நீங்கள் பேசும் போது மாறுபட்ட ஒலிப்பையும் வெளிப்பாட்டையும் அவர்கள் கேட்கட்டும்.

 

எத்தனை வார்த்தைகள், அல்லது அவர்கள் பேசுவதற்கு எவ்வளவு ஆர்வமாக இருக்கின்றார்கள் என்பதெல்லாம் பொருட்டல்ல, அவர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான தொலைநோக்கு பார்வையாக இருக்கும் - எனவே உரையாடலுக்கான எந்த வாய்ப்பையும் அனுபவித்திடுங்கள்.

 

உதவிக்குறிப்பு:

 

தகவல்தொடர்புக்கு பல அம்சங்கள் உள்ளன: பேசுவது மற்றும் கேட்பது மற்றும் நீங்கள் கேட்பதற்கு பதிலளிப்பது. உங்கள் குழந்தை/பிள்ளை ஒரு நல்ல தொடர்பாளர் என்பதை எப்படி உறுதிப்படுத்துவது? அவர்கள் உங்களிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள். அவர்களின் வெற்றிகளைக் கொண்டாட மறக்காதீர்கள் - அது அவர்களின் நம்பிக்கையை வளர்க்க உதவுகிறது.

Recommended Articles