Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

எந்தவொரு அம்மாவிற்கும் நேரம் என்பது மிகவும் விலைமதிப்பற்ற வளமாகும். உங்கள் குடும்பத்துடனும் பிள்ளைகளுடனும் பல்வேறு விதமான பங்குகளை வகிப்பதற்கு இவ்வளமானது போதுமானதாக இல்லையென்பது மாபெரும் சவாலாகவே உள்ளது. உங்களின் நாளாந்த கடமைகளில் குடும்பத்தின் மகிழ்ச்சியினை கட்டியெழுப்பும் முயற்சிக்கு முன்னுரிமை அளிக்கும் நீங்கள் உங்களின் சுய பராமரிப்பிற்கு இறுதியாகவே கவனம் செலுத்துகின்றீர்கள்.

எவ்வாறாயினும், உங்களின் சுய பராமரிப்பினை நீங்கள் புறகணிக்கும் போது நடக்கும் உண்மை யாதெனில் உங்கள் குடும்பத்திற்கு நல்லது செய்வதை விட நீங்கள் அறியாமல் தீங்கு விளைவிக்கின்றீர்கள். இது எவ்வாறு நிகழ்கிறது? தேவையான கவனிப்பை பெறுவதிலிருந்து உங்களை தவிர்க்கும் போது சோர்வு, மன அழுத்தம் மற்றும் பல்வேறு நோய்களை உருவாகுவதற்கான காரணத்தை நீங்களே  அமைத்துவிடுகின்றீர்கள். உங்கள் அன்றாட வாழ்விலும் உங்கள் அன்புக்குரியவர்களிடமும் இது போன்ற தீவிரமான எதிர்மறை விளைவுகளை காட்டுவதற்கான அவசியம் தேவையில்லை.

ஆகையால் உங்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு சிறந்த பராமரிப்பினை நீங்கள் வழங்க நினைக்கின்றீர்கள் ஆயின் நாளாந்த உங்கள் கடமைகளில் அம்மாக்கள் தங்களை கவனித்துக் கொள்வதற்கும் சில மணி நேரங்களையோ அல்லது நிமிடங்களையோ ஒதுக்க வேண்டும் என நான் பரிந்துரை செய்கிறேன்.

 

நீண்ட காலத்திற்கு மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான குடும்பத்தை நோக்கி உங்களது பயணம் தொடர வேண்டுமாயின் உங்களுக்கான சில குறிப்புகள் இதோ!

 

உங்களின் உள ஆரோக்கியம் பற்றி கவனம் எடுங்கள்.

 

ஒவ்வொரு நாளும் ஓய்வெடுக்க நேரம் ஒதுக்குங்கள். உங்களின் குடும்ப சூழ்நிலைக்கு உங்களின் உள ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. உங்களின் மனதையும் உடலையும் நிதானமாக வைத்திருக்கும் தியானம் யோகா பிடித்தமான இசையைக் கேட்டல் புத்தகம் வாசித்தல் போன்ற உங்களுக்கு பிடித்தமான எந்தவொரு செயல்பாட்டினையும் நீங்கள் தேர்வு செய்வது சிறந்ததாக அமையும்.

 

உங்களின் உடல் ஆரோக்கியத்தை பேணல்

உங்களின் நாளாந்த செயற்பாடுகளில் உங்களின் உடல் நலத்தினை மேம்படுத்தும் நடத்தல் சைக்கிள் ஓட்டம் அல்லது வேறு ஏதேனும் உடற்பயிற்சிகளில் 30 நிமிட நேரத்தினை ஒதுக்கி ஈடுபடுதல் சிறப்பாகும். இது உங்களின் உடல் நலனை மேம்படுத்துவது மட்டுமல்லாது நாளைய தினத்தில் உங்களை உற்சாகமாக வைத்திருப்பதற்கான சக்தியினையும் வழங்குகின்றது.

 

நீண்டகாலமாக மறந்து போயிருந்த ஓர் பொழுதுபோக்கு ஒன்றினை தெரிவு செய்யுங்கள்.

நீங்கள் ஒரு காலத்தில் தீவிர ஆர்வமாக இருந்த விடயங்கள் தொடர்பான பட்டியலை பாருங்கள். அது தோட்டக்கலை பெயின்டிங் அல்லது தையல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு கிழமையிலும் அவற்றில் ஒன்றை செய்வதற்கு நேரத்pனை ஒதுக்குங்கள். இது உங்களின் நாளை மேலும் உற்சாகமூட்டும்.

.

உங்களின் நாளினை திட்டமிடுங்கள்

ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய வேலைகளுக்கு முன்னுரிமை கொடுக்க முயற்சிக்கவும். முன்னுரிமைப் பணிகளை காலை மாலை இரவு என நேர ஒழுங்கு முறைகளுக்கேற்ப உங்களின் நாளை ஒழுங்குப்படுத்திக் கொள்ளவும். நடைமுறையில் சாத்தியமற்ற ஒரு நாளில் பூர்த்தி செய்ய முடியாத அளவு பணிகளை இழுத்துப் போட்டுக் கொள்வது சிறந்ததல்ல. இவ்வாறு செய்வதனால் நாளின் முடிவில் விரக்தி மற்றும் சோர்வு நிலை ஏற்படக் கூடும்.

 

உங்கள் பிள்ளைகளுக்கான நாளாந்த பழக்கவழக்கங்களை ஏற்படுத்துங்கள்.

உங்களின் நாளை ஒழுங்குப்படுத்தும் அதே வேளை உங்கள் பிள்ளைகளின் நாளையும் பொருத்தமான முறையில் ஒழுங்குப்படுத்துதலும் அவசியமாகும். இது உங்களுக்கு நிம்மதியான மனநிலையை கொடுப்பதுடன்  அத்தோடு நீங்கள் மிக முக்கியமான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் வேலையில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருப்பர்.வாசிப்பு நேரம் வெளியில் விளையாடுதல் வீட்டு பாடங்களை செய்யும் நேரம் தொலைக்காட்சி பார்வையிடும் நேரம் மற்றும் தேநீர் நேரம் உள்ளடங்கலாக ஓர் நாளாந்த நடைமுறை ஒன்றை கொண்டிருத்தல் அவர்களை பொறுப்புளளவர்களாக ஆக்குவதுடன் அவர்களை அந்நாளிற்கு தயார்நிலையில் வைத்திருக்கவும் உதவும்.

 

உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.வீட்டு பராமரிப்பு திறன்களை புதிய வடிவில் செம்மைப்படுத்துங்கள் .நீங்கள் விரும்பிய விளையாட்டினை மீண்டும் விளையாடலாம் அல்லது இதற்கு முதல் இசைக்க விரும்பிய இசைக்கருவியை வாசிக்கலாம். நீங்கள் அதிக அறிவைப் பெற விரும்பிய ஒரு பகுதியை பற்றிய புத்தகத்தினை படியுங்கள்.புதிதாக ஒன்றை கற்றுக்கொள்வற்கு இது ஒன்றும் தாமதமில்லை.

 

உங்களுக்கு நீங்களே உபசரியுங்கள்

உங்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றும் அதேவேளை நீங்கள் சில சிறப்பான உபசரிப்புக்களுக்கும் உரியவர்கள். தேநீர் வேளை ஒன்றிற்காக உங்களின் நெருங்கிய நண்பர்களை சந்தியுங்கள் பேஷியல் செய்யுங்கள் ஆழ்ந்த உறக்கம் ஒன்றை எடுங்கள் சொப்பிங் செல்லுங்கள் இது போன்று உங்களுக்கு பிடித்மான ஏதேனும் ஒன்றை செய்யலாம்.

 

அம்மாக்கள் சுய பராமரிப்பிற்கு நேரத்தினை ஒதுக்குவது மிகவும் முக்கியமாகும். அது சில நிமிடங்களாகவோ அல்லது சில மணித்தியாலங்களோவோ இருக்கலாம் உங்களை கவனித்துக்கொள்வது புத்துயிரளிக்கும். உங்கள் குடும்பம் முன்பை விட மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் ஓர் அம்மாவை  பெற ஆரம்பிப்பார்கள்.

 

ஆகவே உங்களை நன்றாக பராமரியுங்கள்!

Recommended Articles