ப்ரோபையோட்டிக் என்பது உங்கள் உடலில் இயற்கையாக காணப்படும் உயிருள்ள, நல்ல பக்டீரியாவாகும். பக்டீரியா எனும் பொழுது அவை பாதகமானவை என உங்களுக்கு தோன்றலாம். அனால் எல்லா பக்டீரியாக்களும் தீங்கானவை அல்ல. சில பக்டீரியா வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
தாய்ப்பாலில் ப்ரோபையோட்டிக்ஸ் இருப்பது உங்களுக்கு தெரியுமா? வேறு விதமாக சொல்வதானால் நல்ல பக்டீரியாக்கள்.
செரிமானத்துக்கு உதவுதல், குழந்தைகளின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் கிருமிகளை கட்டுப்படுத்தி அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்ற ஆரோக்கியமான அனுகூலங்களை ப்ரோபையோட்டிக் வழங்குகிறது. குறிப்பாக இரைப்பை குடல் அழற்சியால் ஏற்படும் வயிற்றுப்போக்கின் கால அளவின் தீவிரத்தையும் குறைக்க உதவலாம்.
ப்ரோபையோடிக்கினால் ஏற்படக்கூடிய நன்மைகள் மிக முக்கியமானவை. ஆரோக்கியமான குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடிய கடுமையான மலச்சிக்கல், பெருங்குடல் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் போன்றவற்றை குணப்படுத்தவும் ப்ரோபையோடிக்குகள் உதவலாம்.
ஆகவே, ப்ரோபையோட்டிக் என்பது குழந்தைகளுக்கான மக்களால் விரும்பப்பட்ட ஒரு இயற்கை நிவாரணியாகும். நல்ல பாக்டீரியாக்களை பெற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த உணவுவகைகளாக நாம் தினம்தோறும் உண்ணக்கூடிய தயிர், சீஸ் மற்றும் சில வளர்ச்சிக்கு உதவும் பால்மா வகைகள் போன்றவற்றை கூறலாம்.