வளர்ச்சிக்கான மைல்கற்கள் - புதிய தொடக்கங்களுக்காக உங்கள் குழந்தையை ஊக்கப்படுத்தி தயார்படுத்துங்கள்

Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

வளர்ச்சிக்கான மைல்கற்கள் - புதிய தொடக்கங்களுக்காக உங்கள் குழந்தையை ஊக்கப்படுத்தி தயார்படுத்துங்கள்

Nimali Buthpitiya

img

4 வயதாகும் போது குறுநடை போடும் உங்கள் குழந்தை குறும்புகளையும் வெளிகாட்டிடும். அமைதியாக உட்கார முடியாது, மேலும் தன்னை மகிழ்விக்க பல்வேறு வழிகள் தேடுகின்றன.  48 - 54 மாத வயதில், உங்கள் குழந்தை பத்து வினாடிகள் அல்லது அதற்கு மேல் ஒரு காலில் நிற்க முடியும். 54 - 60 மாத வயதிற்குள், குழந்தையால் நன்றாக பாய்ந்து ஓட முடியும்.

இந்த வயதில், உங்கள் பிள்ளைக்கு எது சரி எது தவறு என்பது பற்றிய அடிப்படை புரிதல் உள்ளது, மேலும் நீங்கள் வீட்டைச் சுற்றி செய்வதைப் பின்பற்றுவதில் அவர் மகிழ்ச்சியடைவதோடு, இவ்வயதில் உங்கள் குழந்தையின் மகிழ்ச்சிக்காக, உங்களது சக்தியை பயன்படுத்த வேண்டிய காலம். உங்கள் குழந்தைக்கு 48 - 54 மாதங்கள் ஆகும் போது, அவர் இரண்டு முதல் மூன்று எளிய வழிமுறைகளை ஒரே நேரத்தில் பின்பற்றிட கூடும்.

img

இவ்வயதில் ஒரு குழந்தையிடம் கேட்கக்கூடிய சாதாரண மட்டத்திலானதோர் கேள்வி 'உங்கள் பெயர் என்ன?'என்பதே. புதிதாய் சந்தித்திடும் ஒருவர் குழந்தையிடம் பெயரை கேட்டிடும் போது, ஆடம்பரத்துடன் மகிழ்ச்சியாய் பதிலளிப்பதை உங்களால் காண முடியும். எழுத்துக்களை எழுதிட பயிற்றுவிப்பதன் பின் குழந்தைக்கு பெயரை எழுதிட சொல்லிக்கொடுங்கள். குழந்தை இதன் போது பெரிதும் மகிழ்ச்சியடைவதோடு, வாய்ப்பு கிடைத்திடும் போது தன் திறமையை மற்றவர்களிடம் பகிர்ந்தும் மகிழ்வதை உங்களால் காணமுடியும். 48 – 54 மாதங்களுக்கிடையேயான குழந்தைகளுக்கு தன் பெயரின் முதற்பகுதியை எழுதிட முடியும்.

அத்தோடு, 4 வயதான குழந்தைகள் ஆக்கத்திறன் மற்றும் விநோதமான செயற்பாடுகளில் அதிக ஆர்வத்தினை காட்டிடும். எனவே குழந்தையின் சிந்தனைகளை சுதந்திரமாக வெளிகாட்டிடுவதற்கான இடம் கிடைத்திடும். சுpல குழந்தைகள் எவரும் சிந்திகாத வகையில் வித்தியாசமான சிந்தனைகளை வெளிகாட்டிட முடியும். உடல் பாகங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் பற்றியும் கற்றுக்கொடுங்கள். உதாரணமாக நமக்கு பார்வை கிடைப்பது கண்களினால் என்பதை புரிந்துகொள்ளவும் குழந்தையினால் முடியும்;. 

48 – 54 மாதங்களை கடந்திடும் உங்கள் குழந்தை, குறைந்தது தலை, முகம், கை மற்றும் கால்கள் உட்பட உடல் பாகங்கள் மூன்று முதல் ஐந்திற்கிடையே உடனான மனித உருவத்தினை வரைந்திட கூடும். கோடுகளிடையே படமொன்றினை வெட்டிடல் போன்றவற்றை இவ்வயதிலிருந்தே மேம்படுத்திட முடியும். 54 – 60 மாதங்களினுள் முக்கோணம் போன்ற எளிய வடிவங்களை வரையவும், அறிந்திடம் வகையில் பூக்கள், நாய், பூனை போன்றவற்றையும் வரைந்திட முடியும்.

img
 

உங்கள் குழந்தை தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை அவதானிக்கும்போது, குழந்தையின் ஆர்வம் அதிகரிக்கிறது, மேலும் குழந்தையினால் விரைவாக சொந்தக் கதைகளை உருவாக்கி, ஆக்கப்பூர்வமான கதைசொல்லல் திறன் மூலம் உங்களைக் கவர முடியும். 48 - 54 மாதங்களுக்குள், உங்கள் குழந்தை கதைகளை நினைவுபடுத்த முடியும். வாக்கியங்களில் பேசும் திறனைக் கொண்டு புத்தகங்களைப் பார்த்து வாசிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். 54 - 60 மாத வயதில், உங்கள் குழந்தை சில கடிதங்களைப் படிக்க முடியும்.

இவ்வாறான முன்னேற்றங்களுடன்;, உங்கள் சிறு குறும்பு குழந்தை விரைவில் பள்ளி பருவத்தை அடைவதை உங்களால் எண்ணியிருக்கவே முடியாது! அதிகாலை பள்ளிப் பேருந்தைப் பிடிக்கவும், சரியான நேரத்திற்குச் செல்லவும் சிறுநாட்களாகலாம். இந்தத் தருணத்தில், பள்ளிச் சீருடையை தானே அணிந்து கொள்வது, உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் வாழ்க்கையை எளிதாக்குகிறது. 54 - 60 மாத வயதிற்குள், உங்கள் குழந்தை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொத்தான்களை போட்டு சுதந்திரமாக உடை அணிய பழகியிருக்கும்.
 

img

உங்கள் கைகளில் தூங்கிய குழந்தை, இப்முபோது வளர்ந்து துள்ளிக்குதிப்பது முதல் ஆடை அணிவது வரை பார்க்கும் போது உங்கள் கடந்த காலத்தினால் சிறு கவலையும் தோன்றலாம். அவர் பாலர் பள்ளிக்குச் செல்லும்போது, அவரது சொற்களஞ்சியம் மற்றும் பேசும் திறன்கள் பெரிதும் மேம்படும், மேலும் அவர் வழக்கத்தை விடவும் தொடர்ந்து பேசுவார். 54 - 60 மாத வயதிற்குள், உங்கள் குழந்தை ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட வார்த்தைகளுடன் பேசிடும் திறனும் மேம்படும்.

உங்கள் பிள்ளை இப்போது எப்படி, ஏன், என்ன நடக்கின்றன என்று அடிக்கடி யோசிக்கும் ஆர்வமுள்ள வயதில் இருக்கிறார். உங்களிடம் பதில்களைக் காட்டிலும் அதிகமான கேள்விகளை அவர் கேட்கத் தொடங்குகிறார், ஆனால் நீங்கள் அவர்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும் திறன் கொண்டிருப்பார்.

54 முதல் 60 மாதங்கள் வரை, உங்கள் குழந்தை ஆழமான கேள்விகளைக் கேட்கத் தயாராக இருந்திடும், அது அர்த்தத்தையும் நோக்கத்தையும் குறிக்கும், மேலும் அவர் 'ஏன்' என்று தொடங்கும் கேள்விகளுக்கு வெற்றிகரமான பதில்களை அளிக்க முடியும்.

Recommended Articles