கற்றல் வழிமுறைகள் அவதானம் மற்றும் கவனம்
Dinusha Manjarie Wickremesekera
கொவிட்-19 தொற்றுநோய், பொதுமுடக்கம் மற்றும் பயணத்தடை ஆகியவற்றை நாம் எதிர்நோக்குவதற்கு முன்பாக கல்வி செயற்பாடுகளானது, வழமைப்போல பாடசாலை சூழலில் முன்னெடுக்கப்பட்டது. இந்த முறைசார் கல்வி செயற்பாடுகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆசிரியரினால் மேற்கொள்ளப்படும். சில மாணவர்களுக்கு இந்த கற்றல் முறையானது எளிதாக அமைந்த போதிலும், சில மாணவர்களுக்கு இது ஊக்கமிழக்கச் செய்யும் முறையாகவே அமைந்தது. ஆனால் தற்போது மாணவர்கள் தங்கள் கற்றல் செயற்பாடுகளை, குறைந்தளவிலான ஆசிரியர் மேற்பார்வையின் கீழ் வீட்டிலிருந்து வண்ணம் முன்னெடுத்து வருகின்றார்கள். இந்த நிலைக்கு காரணமான இணையவழி கற்றல் செயற்பாடானது, சில மாணவர்களுக்கு இலகுவாக இருந்தாலும், சிலருக்கு பெரும் சவாலாகவே விளங்குகின்றது.
உங்கள் பிள்ளைகள் இணையவழி மூலமான கற்றலை எவ்வாறு சமாளிக்கின்றார்கள்? கற்றல் என்பது புதிய தகவல்களைச் சேகரித்து, ஒழுங்கமைத்து, ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்தவற்றில் இணைத்துக்கொள்வதற்கான செயல்முறையாக கருதப்படுகின்றது. நம் ஒவ்வொருவருக்கும் விருப்பமான கற்றல் வழிமுறை உள்ளது. விளக்கப்படுத்துவதன் மூலமான நீங்கள் ஒரு விடயத்தை நினைவில் வைத்திருக்கலாம், அல்லது நீங்கள் உண்மையில் அதைச் செய்யும் போதே அது உங்கள் மனதில் பதியப்படும் அல்லது அதே விடயம் எவ்வாறு செய்யப்படுகிறது என்பதைப் பார்க்கும் போது அது உங்கள் மனதில் பதியலாம். நாம் எவ்வாறு கற்கின்றோம் என்பது ஒருவருக்கொருவர் வேறுபடலாம், அதுவே நம் தனித்துவமாக விளங்குகின்றது.
புதியதோர் அறிவை தங்கள் நினைவுடன் சேமித்துக்கொள்வதற்காக, பிள்ளைகள் 4 வகையான கற்றல் வழிமுறைளை பின்பற்றுவதாக உளவியலாளர்கள் அடையாளம் கண்டுள்ளார்கள்
• கட்புலனூடாக கற்பவர்கள் - இவர்களால் பார்ப்பதன் மூலம் சிறப்பாகக் கற்றுக்கொள்ள முடியும். படங்கள், வரைபுகள், வரைபடங்கள், எழுத்துரு வடிவங்கள் ஆகியவை கட்புலனூடாக கற்பவர்களுக்கு தகவல்களை சிறப்பாக ஒருங்கிணைத்து நினைவுபடுத்த உதவுகின்றன. இவர்கள் நன்கு விருத்தியடைந்த கற்பனையை கொண்டிருப்பார்கள்.
• செவிப்புலனுடாக கற்பவர்கள் - இவர்களால் செவிப்புலன் (செவிவழி கேட்பதன்) மூலம் சிறப்பாகக் கற்றுக்கொள்ள முடியும். செவிப்புலனுடாக கற்பவர்கள்; செவிமடுத்தல் மற்றும் விவாதங்கள் மூலமாக சிறப்பாகவும் வேகமாகவும் கற்றுக்கொள்ளும் திறன் படைத்தவர்களாக விளங்குவார்கள். அமைதியான சுற்றுச்சூழல் இவ்வகையான கற்றலுக்கு சிறந்ததொரு களமாக பார்க்கப்படுகிறது.
• ஊறுணர்வுப்புலனூடாக கற்பவர்கள் - இவ்வழிமுறையால் கற்பவர்கள்; தங்கள் அவதானிக்கும் விடயத்தை ஓவியங்களாக வரைவதன் மூலமும், தொடுதல் மூலமாகவும் சிறப்பாகக் கற்றுக்கொள்ளும் திறன் படைத்தவர்களாக விளங்குவார்கள். அத்துடன் இதுவே அவர்களின் கவனம் செலுத்துவதற்கான வழியாகவும் விளங்குகின்றது.
• மெய்யுறு ஊடாக கற்பவர்கள் - ஒரு விடயத்தை செய்வதன் மூலமாக இவர்களால் சிறப்பாக கற்றுக்கொள்ள முடியும். இவ்வகையான கற்றல் வழிமுறையை பின்பற்றுபவர்களுக்கு நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது ஒரு பிரச்சனை அமைந்துவிடக்கூடும், ஏனெனில் சுதந்திரமாக நகர்வது மற்றும் ஆக்கல் செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலமாகவே இவர்களால் சிறந்த அவதானத்தை செலுத்த முடியும்.
நம்மில் அனைவரும் கற்றல் வழிமுறையின் அனைத்து வகைகளின் கலவையை கொண்டிருப்பார்கள் ஆயினும் பெரும்பாலானோர் இவ்வழிமுறையில் ஒன்றையோ அல்லது இரண்டின் கலவையோ கொண்டிருப்பார்கள். ஒரு தகவலானது உங்களுக்கு எவ்வாறு முன்வைக்கப்படுகின்றது என்பதே, கவனக்குறைவு மற்றும் அவதானக் குறைவு ஆகிய சிக்கல்களை மிக அடிப்படை கட்டங்களில் தோன்றுவதற்கு ஏதுவாக விளங்குகின்றது.
உங்கள் குழந்தையிடம் காணப்படும் ஆர்வங்கள், விருப்பத்தேர்வுகள், பிடித்த செயல்பாடுகள் மற்றும் பலம் ஆகியவற்றை அவதானிப்பதன் ஊடாக உங்கள் குழந்தை எவ்வாறு கற்றுக்கொள்கின்றது என்பதை எளிதாக புரிந்துகொள்ள முடியும். உங்கள் குழந்தை வாசிக்க விரும்புகின்றதா அல்லது படங்களை வரைய விரும்புகின்றதா?, கதைப்புத்தகங்களில் படங்களை பார்க்க விரும்புகின்றதா அல்லது கதைகேட்க விரும்புகின்றதா?, அல்லது விளையாடுவதன் மூலம் கற்றுக்கொள்ள விரும்புகின்றதா என்பதை நீங்கள் அடையாளங் கண்டுகொள்வதன் ஊடாக, பொருள் வெகுமதிகளை நாடாமல் உங்கள் குழந்தையின் கற்றல் செயற்பாட்டை சிறப்பாக ஊக்குவிக்க முடியும்.
ஆனால் அவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தெரியவில்லை, விளையாட்டு அறை, வகுப்பறையாக மாற்றம் பெறும்போது, குழந்தைகளுக்கு தாங்கள் விரும்பாத வெவ்வேறு வகையான கற்றல் வழிமுறைகள் தொடர்பான அனுபவத்தை அளிக்கின்றது. விளையாட்டின் ஊடான கற்றல் எனின், பொருத்தமான விளையாட்டு பொருட்களை கவமான தெரிவுசெய்ய வேண்டும். கற்பனையான விளையாட்டை உருவாக்குவதற்கு ஏதுவாக அமையும் கையாளும் திறன், புத்தகங்கள், கற்பனை விளையாட்டிற்கான பொருட்கள், நடனம், கலை ஆகியவை கற்றல் செயற்பாட்டில் இடம்பெறுவதை உறுதிசெய்து கொள்ளவும். பாட வேலைகளில் உள்ள சிக்கல்கள் குறித்து உங்கள் குழந்தையுடன் உரையாடுவதன் மூலமே, ஏன் அக்குழந்தை போராட்டத்தை வகுப்பறையில் எதிர்நோக்குகின்றதென்பதை உணர்த்திட முடியும். மேலும், ஆசிரியருடன் இணைந்து உங்கள் குழந்தைக்கு ஏற்ற கற்றல் வழிமுறை குறித்து நீங்கள் கவனம் செலுத்துவதன் மூலம் உங்கள் குழந்தையின் அவதானம் மற்றும் கவனத்தை விருத்தி செய்திட முடியும்.
இதுவரை மாணவர்களுக்கு இணையவழி கற்றலில் பகிரப்பட்ட தகவல்கள் அனைத்தும் கட்புல மற்றும் செவிப்புல கற்றல் வழிமுறைகளை பின்பற்றுவதாகவே அமையப்பெற்றுள்ளன. ஒருவேளை ஒரு குழந்தை
ஊறுணர்வுப் புலனூடாக அல்லது மெய்யுறு ஊடாக கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாயின் அக்குழந்தைக்கான கற்றல் வாய்ப்பானது, இணையவழி கல்வியில் குறைவாகவே அமைந்துள்ளது. அவ்வாறானதொரு தருணத்தில் அவ்வகையான குழந்தைகளின் அவதானம் குறுகிய நிலையில் காணப்படும். அத்துடன் இதுவரை தான் பின்பற்றிய விருப்பமாக கற்றல் வழிமுறையிலிருந்து வேறுபட்ட கற்றல் முறையினை பின்பற்றும் போது குறித்த விடயத்தில் கவனம் மற்றும் அவதானம் செலுத்தில் பெரும் சவால்களை அக்குழந்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
உளவியலாளர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், மேற்கத்திய நாடுகளில் இணையவழி மூலமான கற்கையானது ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இதுவொரு குறிப்பிடத்தக்க விடயமாக நாம் அவதானிக்க வேண்டும். 2 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கட்புல திரைகள் வழங்கப்படக் கூடாதென பரிந்துரைக்கப்படுகின்றது. 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு, நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் கட்புல திரையை வழங்குவதற்கு பரிந்துரைக்கப் படுகின்றது. இந்த பரிந்துரைகளை தற்போது மேற்கொள்ளப்படும் இணையவழி பாட வகுப்புகளில் உள்வாங்குதென்பது சாத்தியமற்றதொரு விடயமாகும். இப்போது ஆன்லைனில் செய்யப்படும் பள்ளி வேலைகளுடன் ஒட்டிக்கொள்வது சாத்தியமில்லை, சில சமயங்களில் குடும்பத்தினருடனான தொடர்புகள் கூட இணையத்தின் உதவியுடன் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன் காரணமாகவே கட்புல திரையின் முன்பாக குழந்தைகள் செலவிடும் நேரம் அதிகமாகியுள்ளது. ஆன்லைனில் இருக்கும். எனவே திரையில் மணிநேரம் அதிகரித்துள்ளது. உடல்ரீதியான செயற்பாடுகள், நடத்தை மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றில் அடையாளங் காணப்பட்ட எதிர்மறையான விளைவுகளின் காரணமாகவே பரிந்துரைகள் நடைமுறையில் இருக்கின்றன.
இந்நிலையில் உங்களுக்கான தெரிவு இல்லாத போதும், இவ்விடயம் தொடர்பில் விழிப்புடன் இருப்பதும், கட்புல திரையின் பயன்பாட்டு நேரத்தை கண்காணிக்கவும், ஆபத்துகளை குறைக்கவும, ஓர் சமநிலையை பேணவும் இப்பரிந்துரைகள் பெரும் உதவியாக அமைகின்றன.
வேலைகளை சமநிலைப்படுத்துவது, குழந்தைகள் மற்றும் கற்றல் செயற்பாடு போன்றன எளிதான விடயமல்ல. இருப்பினும், இதற்காக நேரத்தை ஒதுக்கி, பள்ளி வேலைகளில் அவதானம் மற்றும் கவனம் செலுத்துவதில் காணப்படும் பிரச்சனைகளை அடையாளங்கண்டு தீர்ப்பதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியும்.
உதவிக்குறிப்பு /டீஸர்:
தகவலொன்று எவ்வாறு முன்வைக்கப்படுகின்றது என்பதிலேயே நாம் எவ்வாறான கற்றலை பின்பற்றுகின்றோம் என்பது அமைந்துள்ளது. பொதுவாக 4 வகையான கற்றல் வழிமுறைகள் உள்ளன, ஒவ்வொரு வழிமுறையும் ஒரு குறிப்பிட்ட வகை தகவல்களில் கவனம் செலுத்துவதற்கு உதவியாக அமைகின்றது. உங்கள் கற்றல் வழிமுறையை அறிந்துகொள்வதன் ஊடாக கற்றல் செயற்பாடுகளில் தேர்ச்சி பெறமுடியும்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles
Nimali Buthpitiya
உங்கள் இரண்டு வயதே நிரம்பிய சுட்டிச் செல்லத்தை அறிந்துகொள்ளுங்கள்
உங்கள் செல்லக் குழந்தை விபரீதமான மாற்றங்கைளை எதிர்கொள்ளும் டெரிபள் 2 எனும் இரண்டு வயதை எட்டும் போது அவர்களது நடவடிக்கைகளில் இயற்கையான மாற்றங்கள் நிகழும். உங்கள்...
Read More