விளையாட்டின் முக்கியத்துவம்

Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

விளையாட்டின் முக்கியத்துவம்

Dinusha Manjarie Wickremesekera

 “விளையாட்டு என்பது ஆடம்பரம் அல்ல. விளையாடுவது அவசியம்

  கே ரெட்ஃபீல்ட் ஜாமிசன் (Kay Redfield Jamison)

 

உளவியல் மேம்படுத்துனரான   டேவிட் எல்கைண்ட்,( David Elkind)  மகிழ்ச்சியான மற்றும் பயனுள்ள வாழ்க்கைக்கு மூன்று விடயங்கள்   அவசியமாக   உள்ளன என்று கூறுகிறார். பிறருடன் ஒன்றிணைவதற்கான அன்பு  ; சமூக வாழ்க்கையின் தேவைக்கேற்ப   நம்மை மாற்றிக்கொள்ளுதல் , இந்த உலகத்தை தம்வசம் ஈர்த்துக்கொள்ளுதல் மற்றும்; புதிய அனுபவங்களை உருவாக்கிக்கொள்ளுதல் போன்றனவே அவை . 

 

நம் வாழ்நாள் முழுவதும் வேலைக்கும் விளையாட்டுக்கும் வெவ்வேறு அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெரியவர்களாகிய நாம் வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம் . குழந்தைப்பருவத்தில்   விளையாடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்றாலும் அதற்காக ஒதுக்கப்படும் நேரமானது குறைவானதே .

 

விளையாட்டு என்பதற்கு “ பிள்ளைகள் மற்றும் இளம் பருவத்தினர் பெரியவர்களால் கூறப்படும் விடயங்களை செய்யாமல் தங்களுக்கு பிடித்ததை செய்வது என வரைவிலக்கணமாக கூறப்படுகின்றது. விளையாட்டில் பெரியவர்களின் தலையீடு இல்லாதபோது , குழந்தைகளும் இளையவர்களும் தமது சுயமான எண்ணங்களையும் , ஆர்வங்களையும அவர்களுக்கேயுரிய முறையில் பின்பற்றும்போது , விளையாட்டானது அவர்களை ஆக்கபூர்வமாக   செயற்படவைக்கிறது  .    என்ன செய்வது, எப்படி செய்வது என்று குழந்தைகள் தீர்மானிக்கிறார்கள். தங்களுக்கு முன்னால் இருக்கும் வளங்களை ஆக்கப்பூர்வமாக கையாள்வதால், அவர்கள் தங்கள் சுற்றுச்சூழலின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டவர்களாகின்றனர்

 

அவர்கள் விளையாடும்போது, அவர்களின் மொத்த ஆற்றல்களுக்கு  (நடத்தல், சமநிலை, உதைத்தல், ஓடுதல், எறிதல், பிடிப்பது போன்றவை) அத்தோடு சிறந்த மோட்டார் திறன்களுக்கும் (சிறிய தசைகளின் மேம்பட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கையாளுதல் ஆகியவற்றின் மீது தேர்ச்சி பெறுகிறார்கள். நம் கைகள், கால்விரல்கள் மற்றும் கண்கள் மற்றும் முக தசைகள் போன்றவை)மேலதிகமாக தேர்ச்சியினை பெறுவதோடு அவர்கள் பயன்படுத்தும் முறையில் அவர்கள் தங்கள் உடல் வளர்ச்சியின் மேம்பாட்டிற்கு துணை புரிகின்றார்கள் .   ஒரு கதையை உருவாக்கும் நடைமுறை அல்லது விளையாட்டுப் பொருட்களின் வெவ்வேறு  பயன்பாடுகள்     , விளையாட்டில் புதிர்களை உருவாக்குதல் ஆகியவை , சிறு  குழந்தைகளுக்கான பயிற்சிகளை வழங்கி  அவர்களின் அறிவாற்றல் திறனை விரிவுபடுத்துகின்றன. முதலில் தாங்களாகவோ அல்லது பராமரிப்பாளர்களுடனோ  விளையாடுவதும், பின்  குழந்தைகள்

தங்கள் ஒத்த   வயதுடைய குழந்தைகளுடன் பழகத் தொடங்குவதற்கும், பின்னர் பெரிய குழுக்களாக விளையாடுவதற்கும் உதவுகிறது. விளையாடுவது குழந்தைகள் மற்றவர்களின் உளமறிந்து செயற்படுவதை மேம்படுத்துவதோடு வேகமாக தொடர்பு கொள்ளவும் உதவுகிறது.

 

 

நீங்கள் உங்கள் பிள்ளை அல்லது பிள்ளைகளுடன் விளையாடும்போது, அவர்களுக்கு மிக முக்கியமான செய்தியைக் கொடுக்கிறீர்கள். உங்கள் செயலானது   "நீங்கள் எனக்கு மிகவும்   முக்கியம்"  என்பதை பிள்ளைகளுக்கு  உணர்த்துகிறது. நீங்கள் உங்கள் பிள்ளையுடன் விளையாடும்போது, ஒரு புதிரைச் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அதன்மூலம்   உங்கள் குழந்தை ஒரு சிக்கலை எவ்வாறு தீர்ப்பது என்பதைக் கற்றுக்கொள்கிறது – நீங்கள் அவர்களுடன்   விளையாடும்போது "நான் என் சிறிய கண்களால்    உளவு பார்க்கிறேன் ..." ஏதோ பச்சை நிறம்.... (என புதிரிடுவதன்மூலம் )  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று உங்கள் குழந்தையை  கண்டுபிடிக்கச் சொல்லுங்கள்.. இதன்மூலம் அவர்களது கற்றல் வலுப்படுத்தப்படுவதுடன் , உங்கள் கண்களின் ஊடாக அவர்கள் சுற்றுச்சூழலையும்   பார்த்துக் கற்றுக்கொள்கிறார்கள். 

 

 

பெற்றோரின் ஈடுபாட்டுடன் குழந்தைகள் தாமாகவே  விளையாட்டுக்களில் ஈடுபடுதல் வேண்டும்.  தம்மை  ஒத்த வயதுடைய பிள்ளைகள் மற்றும் வயதில் மூத்த அல்லது இளைய பிள்ளைகள் ஒன்றிணைந்து செயற்படும்போது, அந்த பயணத்தில் ஏற்படும் சண்டைகள் சந்தோஷங்கள் , விளையாடுவதற்கான சூழ்நிலைகள் , போன்றவையே அவர்களை சுயமாக செயற்படவும் , ஆக்கபூர்வமாக சிந்திக்கவும் , மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவும்; .    ஆக்கப்பூர்வமான விளையாட்டு என்பது தொழில்நுட்பத்துடன் பிணைந்திருப்பது   அல்லது திரையைப்  பார்த்துக்கொண்டிருப்பது அல்ல. ஓரளவிற்கு இதுவும் ஓர் நல்லவிடயம் .   எவ்வாறாயினும் விளையாட்டில் அழுக்கடைவது , களைப்புறுவது சிரிப்பது , அழுவது மற்றும் விவாதங்களுக்கு தீர்வுகாணுவது என அனைத்தும் முக்கியமானது .

 

விளையாடுவதற்கான வழிமுறைகள் :

     

1. களிமண்ணுடன் விளையாடுதல்

2. தங்களிடம் உள்ள பொருட்களை வைத்து வித்தியாசமான     வடிவங்களை உருவாக்குதல்

3. பொருட்களைக் கொண்டு வீட்டைக் கட்டுதல்

4. வீட்டில் இருக்கும் விளையாட்டுப் பொருட்கள்

Recommended Articles